2 மேட்ச் 2 விக்கெட்! இந்திய டீம் அடித்த சிக்சரை விட ஆசிப் அலி அடித்த சிக்சர் அதிகம்! கம்பீர் காட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் அடுத்தகட்ட பயணம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியை சந்தித்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

Recommended Video

    Gambhir Slams Indian Team After Loss vs Kiwis | T20 WC Super 12 | OneIndia Tamil

    முக்கியமான போட்டிகளில் அணியின் செயல்பாடு பலவீனமாகவே இருந்தது என்று அவர் கூறியுள்ளார். அணியின் மன உறுதியையும் அவர் கேள்வி எழுப்பினார்.

    டீம் இந்தியாவின் ஆட்டங்களால் கம்பீர் மிகவும் அதிருப்தியும், ஏமாற்றமுமடைந்துள்ளார்.

     பெரிய போட்டிகள்

    பெரிய போட்டிகள்

    இதோ கம்பீர் கூறிய கருத்து: திறமை என்பது வேறு விஷயம், நீங்கள் இருதரப்பு தொடர்களில் நன்றாக விளையாடலாம், ஆனால் இதுபோன்ற பெரிய போட்டிகளில் ஆடும்போது, ​​​​நீங்கள் கண்டிப்பாக சிறப்பாக செயல்பட வேண்டும்.

     ஐசிசி வேறு மாதிரி

    ஐசிசி வேறு மாதிரி

    இந்திய அணிக்கு இது ஒரு காலிறுதி போட்டி போல் இருந்தது. இதைப் பற்றி பல நாட்களாக பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் பிரச்சனை என்னவென்று நமக்கு நன்கு தெரியும். குழுவின் மன உறுதி முக்கியம். நீங்கள் இருதரப்பு தொடரில் ஆடுவது வேறு விஷயம். ஏனெனில் தவறு செய்தால் மீண்டு வர வாய்ப்பு உள்ளது. ஆனால் நாக் அவுட் போட்டிகளில் அப்படி ஆட முடியாது.

     மன உறுதி இல்லை

    மன உறுதி இல்லை

    இதுபோன்ற போட்டிகளில் இந்திய அணிக்கு மன உறுதி இருந்ததாக நான் நினைக்கவில்லை. ஆம்.. வீரர்களுக்கு திறமை இருக்கிறது. இருதரப்பு தொடர்களில் இந்தியா மிகவும் ஆபத்தான அணியாகத்தான் உள்ளது. ஆனால் ஐசிசி போட்டிகளில் தோல்வியடைய மன உறுதி இல்லாததுதான் காரணம்.

     ஆதரவாக இருக்க சொல்கிறார்கள்

    ஆதரவாக இருக்க சொல்கிறார்கள்

    அணியின் செயல்பாடுகள் சரியில்லாதபோது, ​​நாம் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இது நீண்ட காலமாக குறிப்பாக ஐசிசி போட்டிகளில் நடந்து கொண்டே இருக்கிறதே. நாமும் எப்போதும் ஆதரவாகத்தான் இருக்கிறோம். ஆனால் நிலைமை மாறவில்லை.

     முக்கிய போட்டிகளில் கம்பீர் அதிரடி

    முக்கிய போட்டிகளில் கம்பீர் அதிரடி

    2007 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 75 ரன்கள் எடுத்து, இந்திய அணியின் வெற்றிக்கு இரும்பு தூண் போல செயல்பட்டவர் கவுதம் கம்பீர். இந்திய அணி 2011ல் ஒரு நாள் உலக கோப்பை தொடரில் ஆடியபோதும், சிறப்பாக ஆடினார். டென்ஷனான பைனலில் கம்பீர் 97 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். தோனியின் 91 ரன்களும் இணைந்து இந்தியா உலக கோப்பையை வெல்ல உதவியது.

     பொறுப்பை ஏற்க வேண்டும்

    பொறுப்பை ஏற்க வேண்டும்

    கவுதம் கம்பீர் மேலும் கூறுகையில், இருதரப்பு தொடர்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது. ஆனால் ஐசிசி போட்டிகளில் அதன் செயல்திறன் மோசமாக உள்ளது. இந்த போட்டி மிகவும் முக்கியமானது, ஒரு வீரராவது பொறுப்பை சுமந்து வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

     2 போட்டிகளில் 2 விக்கெட்

    2 போட்டிகளில் 2 விக்கெட்

    நாம் 150-160 ரன்களையாவது எட்டியிருந்தால், அது வேறு விஷயம். நிச்சயமாக, அணியில் நிறைய திறமைகள் உள்ளன, ஆனால் மனரீதியாக அணி வலுவாக இல்லை. இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு எதிராகவும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதோடு மட்டுமல்லாது, இரு போட்டிகளிலும் சேர்த்து இந்திய பவுலர்கள் எடுத்த மொத்த விக்கெட் வெறும் 2 மட்டுமே. 32.2 ஓவர்கள் வீசிய இந்திய பவுலர்கள், கொடுத்த ரன்கள் 263 ஆகும்.

     ஆசிப் அலி

    ஆசிப் அலி

    https://twitter.com/AdilAhm09042613/status/1455040256944873474?s=20இதேபோல பாகிஸ்தான் அதிரடி வீரர் ஆசிப் அலி உலக கோப்பையில் இதுவரை 19 பந்துகளை சந்தித்து 7 சிக்சர்களை விளாசியுள்ளார். மொத்த இந்திய அணி இதுவரை 6 சிக்சர்தான் அடித்துள்ளார். இந்திய அணி சந்தித்த பந்துகள் எண்ணிக்கை 240. அதாவது 40 ஓவர்களாகும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+