மோடி அறிவித்தாரே.. உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசி.. அதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா?
உலகின் முதல் டி என் ஏ அடிப்படையிலான தடுப்பூசியாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சைகோவ்-டி 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் செலுத்த தகுதியான தடுப்பூசி என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உலகின் முதல் டி என் ஏ அடிப்படையிலான தடுப்பூசியாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சைகோவ்-டி 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் செலுத்த தகுதியான தடுப்பூசி என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
நாடு முழுவதும் இதுவரை 140 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் தகுதியான நபர்களில் 61 சதவீதம் பேர், இரு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 89 சதவிகிதம் பேர் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். கொரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தயார்நிலையில் இருக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சைடஸ் கெடிலா தடுப்பூசி
இந்த நிலையில் சிறுவர்களுக்கான தடுப்பூசி ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். சைடஸ் கெடிலா நிறுவனம் உருவாக்கி உள்ள ஊசி முறை அல்லாத சைகோவ்-டி தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல் டி என் ஏ அடிப்படையிலான தடுப்பூசியாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சைகோவ்-டி 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் செலுத்த தகுதியான தடுப்பூசி என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மூன்று தவணையாக செலுத்தப்படும் இத்தடுப்பூசிக்கு ஒப்பதல் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்ட நிலையில் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சைடஸ் கெடிலா தொடங்கியது.

மாதம் ஒரு கோடி தடுப்பூசி
தற்போது மாதம் ஒரு கோடி தடுப்பூசிகள் என்ற அளவில் உற்பத்தி திறன் கொண்டுள்ளது. உற்பத்தி திறன் அடிப்படையில் இளைஞர்களுக்கு முதலில் இந்த தடுப்பூசியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தசைகோவ்-டி தடுப்பூசி வரி உட்பட ரூ.358க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக ஒரு கோடிடோஸ்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 3 டோஸ்களைக் கொண்ட இந்தத் தடுப்பூசி, 28 மற்றும் 56 நாட்கள் இடைவெளியில் செலுத்த வேண்டும். 12 வயதுமுதல் 18 வயதுள்ள பிரிவினருக்காக இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு தடுப்பூசி
கொரோனாவை சமாளிக்க மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் 18வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு கோவாக்ஸின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்த நிலையில், ஜனவரி 3ஆம் தேதி முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சிறப்பம்சம் என்னென்ன
கோவாக்ஸினுக்கு அடுத்தபடியாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2வது தடுப்பு மருந்து என்ற பெருமையும், முதல் டிஎன்ஏ வகை தடுப்பூசி என்ற பெருமையும் கெடிலா நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. சைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி 3 டோஸ்களைக் கொண்டது. முதல் டோஸ் எடுத்துக்கொண்டபின் 28வது நாளில் 2-வது டோஸும், 56 வது நாளில் 3வது டோஸ் செலுத்த வேண்டும். நீடில்லெஸ் தொழில்நுட்பத்தில் இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது. அதாவது, ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் (hypodermic needle) மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படும்.

நீண்ட காலம் பயன்படுத்தலாம்
இந்தத் தடுப்பு மருந்து, மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பம் தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு மருந்தை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை பாதுகாத்து நீண்ட காலத்துக்குப் பயன்படுத்த முடியும், 25 டிகிரி செல்சியஸ்வரை வைத்து, குறுகிய பயன்பாட்டுக்குப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications