Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போர்க்குற்றம்! சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரண்ட்.. நெதன்யாகு கைதுக்கு இந்தியா ஆதரவா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாலஸ்தீனம் மீதான போரில் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்ற கொலை குற்றத்துக்காகவும், போர் விதிகளை மீறியதற்காகவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது போர் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது ஆணையை பிறப்பித்துள்ளது. இந்த ஆணைக்கு எந்தெந்த நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன? இந்தியா ஆதரவா? எதிர்ப்பா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

பிரச்னை என்ன?: இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மத்திய கிழக்கில் உள்ள பாலஸ்தீனம் எனும் நாட்டின் சிறு பகுதியை வாங்கி அங்கு யூதர்கள் எனும் இனக்குழு மக்கள் இஸ்ரேல் என்கிற நாட்டை உருவாக்குகிறார்கள். மத்திய கிழக்கு முழுவதும் இஸ்லாம் மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு இடையில் யூத நாடு உருவானதே பெரும் விவாதம் ஆகியிருந்தது. சரி நம்முடைய இருப்புதான் பேசு பொருளாகிறதே.. நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று இருந்துவிடாலம் என இஸ்ரேல் அமைதியாக இருக்கவில்லை.

netanyahu israel international court of justice

ஆக்கிரமிப்பு: தங்கள் நாட்டை மேலும் விரிவாக்க யூத ஆட்சியாளர்கள் திட்டமிட்டனர். இதற்காக ஆக்கிரமிப்பு தொடங்கியது. இஸ்ரேல் உருவானபோது அது எவ்வளவு பரப்பளவில் இருந்தது என்றும், இப்போது எந்த அளவுக்கு பரவி விரிந்து இருக்கிறது என்றும், மேப்பை பார்த்து தெரிந்துக்கொள்ள முடியும். ஆக இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் போராட தொடங்கினர். இப்போராட்டம் இஸ்ரேல்+அமெரிக்காவால் ஒடுக்கப்பட்டது. எனவே, ஆயுதம் ஏந்திய குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதில் ஹமாஸ் எனும் அமைப்பு முக்கியமானதாகும்.

விடுதலை: பாலஸ்தீன விடுதலையை மையப்படுத்தி ஹமாஸ் அமைப்பு அரசியல் கருத்தியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் இயங்க தொடங்கியது. இந்த அமைப்பை இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகளான அமெரிக்கா உள்ளிட்டவை தீவிரவாத குழுவாக அடையாளப்படுத்தியது. இதனையடுத்து ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த, பதிலுக்கு இஸ்ரேல் போரை அறிவித்தது. ஹமாஸை அழிப்பது மட்டுமே நோக்கம் என்று இஸ்ரேல் கூறினாலும், ஆயிரக்கணக்கான உயிர்களை அந்நாட்டு பாதுகாப்பு படை எடுத்துள்ளது.

உயிர் பலி: சுமார் 45,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். உயிருடன் இருப்பவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள புலம்பெயர தொடங்கியுள்ளனர். உணவு, குடிநீர், மருந்துகள் என எந்த அத்தியாவசிய பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். காசாவில் போலியோ பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 1999ம் ஆண்டே காசாவில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் போரால் மீண்டும் இந்த கொடிய நோய் தலை தூக்கியுள்ளது.

போர் குற்றம்: இதையெல்லாம் நெதன்யாகு தலைமையிலான ராணுவமே செய்தது என்றும், நெதன்யாகு போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார் எனவும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் போர் குற்றம் நடந்திருப்பது உண்மைதான் எனவும், இதற்காக நெதன்யாகு தண்டிக்கப்பட வேண்டியவர் என்று கூறி அவருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பித்தது. இந்த ஆணைக்கு இந்தியா ஆதரவளித்ததா? என்பது குறித்த தகவல்கள் தற்போது தெரிய வந்திருக்கிறது.

இந்தியா ஆதரவா?: அதாவது சர்வதேச நீதிமன்றம் கடந்த 1998ம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரில் ஒரு சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் கடுமையான குற்றங்களுக்காக தனிநபர்களை விசாரிக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்திற்கு உண்டு என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சட்டத்திற்கு இதுவரை 124 நாடுகள் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்து போட்டிருக்கின்றன. கையெழுத்து போட்ட நாடுகள் சர்வதேச நீதிமன்றம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். இப்படி கையெழுத்து போட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே சர்வதேச நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு இந்தியா ஒத்துழைத்து ஆக வேண்டும்.

எனவேதான் நெதன்யாகு மீதான நடவடிக்கை குறித்து இந்தியா இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+