மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கூறியதாவது:- 2024 தேர்தல் சாதாரணமான தேர்தல் கிடையாது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல். 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்குமா? நடக்காதா? என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகும். 10 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை, பதவியில் இருக்கும் முதல்வரை மத்திய அரசு கைது செய்ய முடியும்.. சிறையில் அடைக்க முடியும் என்று யாராவது நினைத்து பார்த்தீர்களா?

இது நடக்கும் என்று கற்பனை செய்து பார்த்தீர்களா? எதாவது திரைப்படத்தில் இந்த காட்சி நடந்து இருக்கிறது.. ஆனால், இந்த சம்பவம் இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது. சுதந்திர இந்தியாவில் நடக்காத நிகழ்வு இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வரை கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள்.. டெல்லி முதல்வரை கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள்..
இது கெஜ்ரிவாலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை இல்லை.. அனைத்து முதல்வர்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு அறிஞர் எழுதியிருக்கிறார். அனைத்து முதல்வர்களுக்கும் மோடி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். நான் கிழிக்கும் கோட்டை நீ தாண்டிவிட்டால் உன்னை கைது செய்து சிறையில் அடைப்பேன் என்று..
இது மிகப்பெரிய பேராபத்து.. மக்கள் தேர்வு செய்யும் முதல்வரை.. அவருக்கு பெரும்பான்மை இருக்கும் போது மத்திய அரசு கைது செய்ய முடியும் என்பது மிகப்பெரும் பேராபத்து.. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்குகிறார்கள். இன்று காலை 1,871 கோடி ரூபாய் வருமான வரி விதித்து இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியே கிடையாது.
1961-ல் நிறைவேற்றப்பட்ட வருமான வரி சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி கிடையாது என்று ஷரத்து இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சிறு பிழையை எடுத்து ஒவ்வொரு ஆண்டாக கணக்கிட்டு வரி, வட்டி என நோட்டீஸ் வந்து இருக்கிறது. ஒரு அரசியல் கட்சியை முடக்குவதற்கு இதைவிட சிறந்த வழிகள் இருக்க முடியாது.
வங்கி கணக்கை முடக்குவது.. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு வருமான வரி விதிப்பது.. இப்போது மற்ற கட்சிகளை முடக்குவதற்கும் வழி கண்டுபிடித்து இருக்கிறார்கள். பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்தால் சைக்கிள் கிடைக்கும்.. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மாம்பழம் கிடைக்கும்.. திமுகவுடன் கூட்டணி வைத்தால் பம்பரம் கிடைக்காது. ஒரு அரசியல் கட்சியை முடக்குவதற்கு பல வழிகளை ஆராய்ந்து செயல்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.200 கோடி வரி பாக்கி இருப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இதன் பின்னர், காங்கிரஸ் கட்சியின் வருமான வரியை மறுமதிப்பீடு செய்யும் வேலையில், வருமான வரித்துறை தொடங்கியது. இதற்கு காங்கிரஸ், எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது.
நீதிமன்றம் இந்த விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று தெரிவித்து விட்டது. இதன் பின்னர் சில மணி நேரங்களில் ரூ.1823 வரி பாக்கி இருப்பதாக காங்கிரசுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதாவது, கடந்த 1993 - 1994 முதல் 2020ம் ஆண்டு வரை வரிக் கணக்குகளில் உள்ள முரண்பாடுகளுக்காக இந்த தொகையை அபராதமாக வருமான வரித்துறை விதித்துள்ளதாக கூறியுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை முடக்கும் பணியில் பாஜக ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதேபோல் காங்கிரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாடும் முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் தான் மத்திய பாஜக அரசை விமர்சித்து ப சிதம்பரமும் பேசியுள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications