ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.1 ஆக பதிவு- வட இந்திய மாநிலங்களும் குலுங்கின!
டெல்லி: ஆப்கானிஸ்தானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.1 அலகுகளாகப் பதிவாகின. ஆப்கான் நிலநடுக்கம் எதிரொலியாக வட இந்திய மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று பிற்பகல் 2.50 மணி அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 241 கி.மீ தொலைவில் வடக்கு வடகிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ்ம் மலைகளை மையமாக வைத்து ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி இருந்தது.

இதனால் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் கட்டிடங்கள் அதிவேகமாக குலுங்கின. ஆப்கானிஸ்தானில் சில மாதங்களுக்கு முன்னர் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நிலநடுக்கத்தில் சுமார் 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனால் தற்போதைய நிலநடுக்கமும் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியா, பாகிஸ்தான் பகுதிகளிலும் நில அதிர்வை எதிர்கொள்ளும். பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டன.
இந்தியாவில் தலைநகர் டெல்லி உட்பட வட இந்திய மாநிலங்களில் கட்டிடங்கள் குலுங்கின. டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களில் தஞ்சமடைந்தனர். இந்த நில அதிர்வு வட மாநிலங்களில் அச்சத்தை ஏற்படுத்தியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications