டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிஷன் சக்தி பற்றி பிரதமர் உரையாற்றியது தப்பில்லை.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு.. காரணம் இதுதான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Mission Shakti | மிஷன் சக்தி பற்றி பிரதமர் உரை!.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு- வீடியோ

    டெல்லி: மிஷன் சக்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இரு தினங்கள் முன்பாக டிவியில் தோன்றி உரையாற்றியது தேர்தல் விதிமுறை மீறல் இல்லை என தேர்தல் ஆணையம் முடிவுக்கு வந்துள்ளது.

    லோக்சபா தேர்தல் அறிவிப்பையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், இரு தினங்கள் முன்பாக திடீரென டிவி சேனல்களில் தோன்றிய பிரதமர் மோடி, இந்திய விஞ்ஞானிகள், விண்ணில் சுற்றிய செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி புதிய சாதனை படைத்ததாக அறிவித்தார்.

    டிவியில் செய்தி வாசிப்பாளர் அறிவிக்க வேண்டிய செய்தியை, பிரதமர் வந்து பேசியதன் நோக்கம், தேர்தல் கால அறுவடைதான் என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டாக உள்ளது.

    பெர்மிஷன் வாங்காம டிவியில பேசிட்டாரு பிரதமர் மோடி.. ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையம் பெர்மிஷன் வாங்காம டிவியில பேசிட்டாரு பிரதமர் மோடி.. ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையம்

    புகார்கள்

    புகார்கள்

    விஞ்ஞானிகளின் சாதனையை அரசின் சாதனை போல காட்டியது மோடியின் மோசமான அரசியல் என காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது. இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையத்திடம், பிரதமர் மோடியின் செயல்பாடு தொடர்பாக புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

    அனுமதி பெறவில்லை

    அனுமதி பெறவில்லை

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தேர்தல் ஆணைய வட்டாரங்கள், பிரதமர் தனது உரைக்கு முன்பாக தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி அனுமதி வாங்கவில்லை என்று கூறியுள்ளனர். அதேநேரம், பிரதமர் மோடி இவ்வாறு ஒரு அறிவிப்பை டிவியில் வெளியிடுவது என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதா இல்லையா என்பது தொடர்பாக ஆலோசித்து வந்தது, தேர்தல் ஆணையம்.

    விளக்கம் கேட்பு

    விளக்கம் கேட்பு

    பிரதமரின் உரை தொடர்பாக இன்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. முன்னதாக இந்த புகார் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திடம் ஏற்கனவே விளக்கம் கேட்கப்பட்டது. துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா (பொறுப்பு) தலைமையிலான அதிகாரிகள் இது பற்றி விசாரித்தனர்.

    மிஷன் சக்தி

    மிஷன் சக்தி

    விசாரணை முடிவில், பிரதமரின் உரை எந்த வகையிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறவில்லை என்று அறிவிக்கப்பட்டது. ஏனெனில் பிரதமர் தனது உரையில், பாஜக என்ற வார்த்தையையோ அல்லது, இதற்காக எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்றோ சொல்லவில்லை. எனவே இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் கிடையாது என்று அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

    English summary
    The Election Commission (EC) is likely to take a final call on Prime Minister Narendra Modi’s address to the nation announcing the success of Mission Shakti on Today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X