இதுதான் முதல்முறை.. குற்றப்பத்திரிக்கையில் இடம் பிடித்த பிரியங்கா காந்தி பெயர்- அமலாக்கத்துறை அதிரடி
டெல்லி: 5 ஏக்கர் நிலம் வாங்கிய விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பெயரை குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை சேர்த்து இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக பதவி வகித்து வருபவர் பிரியங்கா காந்தி. அரியானா மாநிலத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி விற்பனை செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்து இருக்கும் குற்றப் பத்திரிகையில் முதன்முறையாக இவரது பெயரும் இடம்பெற்று உள்ளது. அவரது கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேராவின் பெயரும் இதில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஆனால், குற்றம்சாட்டப்படும் நபர்களின் பட்டியலில் அவர் இல்லை.

வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் சி.சி. தம்பி மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் குடிமகனான சுமித் சாத்தா ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் தலைமறைவாக இருக்கும் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியின் குற்றச்செயல்களை மறைக்க உதவி செய்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. சஞ்சய் பண்டாரி அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியது உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருப்பவர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அமிபுர் கிராமத்தில் பிரியங்கா காந்தியின் பெயரில் வாங்கப்பட்ட வீட்டை, டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான பாவாவிடம் விற்பனை செய்து இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. இதே முகவரிடம்தான் அமிபுர் கிராமத்தில் கடந்த 2005 முதல் 2006 ஆண்டுகளுக்கு இடையே 40.8 ஏக்கர் நிலத்தை ராபர்ட் வதேரா வாங்கியதாகவும், அதை டிசம்பர் 2010 ஆம் ஆண்டு அவரிடமே விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோன்ற ஒப்பந்த முறையை 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த தொழிலதிபர் சி.சி.தம்பி, 486 ஏக்கர் நிலத்தை வாங்கி விற்கும்போதும் பயன்படுத்தியுள்ளாராம். இந்த தொழிலதிபருக்கும் ராபர்ட் வதேராவுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை கூறி உள்ளது. ராபர்ட் வதேரா இதற்கு முன்பும் பல்வேறு வழக்குகளில் அமலாக்கத்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். அதில் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து உள்ளார்.
ஆனால் இந்த வழக்கில் அவரது பெயர் இடம்பெறுவது இதுவே முதல் முறை. அமலாக்கத்துறை மத்திய அரசின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக செயல்படுவதாக அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பிரியங்கா காந்தி மீதான குற்றப் பத்திரிகை தேசிய அரசியல் புயலை கிளப்பி இருக்கிறது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை தொடர்பாக பிரியங்கா காந்தி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அதே சமயம் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இது பற்றி பேசி உள்ளார்கள்.
இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தெரிவிக்கையில், "மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்த தலைவர்களின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் வந்து உள்ளது." என்றார். மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் படோலே பேசுகையில் "பாஜக, காங்கிரசுக்கு அஞ்சுகிறது. அன்று பிரிட்டிஷ் அரசு காந்தியை கண்டு பயந்தது. இன்று மத்திய அரசு காந்தி குடும்பத்திடம் பயப்படுகிறது. உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களைத் திசை திருப்ப பாஜக அரசு முயற்சிக்கிறது" என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா பேசுகையில், "இங்குதான் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை கட்சி தொடங்கும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் சதி செய்கிறார்கள். தேர்தலுக்கு முன் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். இது தொடக்கம் மட்டுமே. இதை அவர்கள் முதல்முறையாகச் செய்வதில்லை. தேர்தல் நெருங்கும்போது இதுபோன்ற சதிகளை செய்கிறார்கள். அவர்கள் அதை செய்யட்டும்" என்றார்.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications