கட்சி அலுவலக வாசலில் தடுத்து நிறுத்தம்.. டெல்லியில் காங். நிர்வாகிகள் பலர் கைது.. போலீஸ் குவிப்பு
டெல்லி: டெல்லி அமலாக்கத்துறை முன்பு 2வது நாளாக இன்று ராகுல்காந்தி ஆஜராக உள்ள நிலையில் காங்கிரஸ் அலுவலகம் செல்ல முயன்ற தலைவர்கள், தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கையாக கைது செய்து அழைத்து சென்றனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ஆஜராக வேண்டி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் ஆஜராகும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகுல்காந்தி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு நேற்று ஆஜரானார். இதையொட்டி நேற்று நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் சார்பில் கடும் போராட்டம் நடத்தப்பட்டது.

2வது நாளாக ராகுல் ஆஜர்
குறிப்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மூத்த தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கைது செய்தனர். மூத்த தலைவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களாக கேசி வேணுகோபால், ப சிதம்பரம் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் இன்று 2வது நாளாக ராகுல்காந்தி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உள்ளார்.

முன்கூட்டியே கைது
இதற்காக இன்று அவர் தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கேசி வேணுகோபால், அசோக் கெலாட் உள்ளிட்டவர்களுடன் அமர்ந்துள்ளார். அதன்பிறகு ராகுல்காந்தி அங்கிருந்து புறப்பட்டு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றார். முன்னதாக காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு ஏராளமான கட்சி தலைவர்கள் படையெடுத்தனர். கூட்டம் அதிகமானதால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர். அதாவது காங்கிரஸ் தலைமை அலுவலகம் வாசலிலேயே காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தமிழக எம்பி கைது
தமிழகத்தை சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்பி உள்ளிட்ட பலர் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் அலுவலகம் உள்ள டெல்லி அக்பர் சாலையில் நேற்றை தினத்தைவிட பலர் குவிக்கப்பட்டு இருந்தனர். அதாவது நேற்றை விட 3 மடங்கு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‛‛பெரிய சர்வாதிகார போக்க நாட்டில் உள்ளது. காங்கிரஸ் பேரியக்கத்தில் உள்ள தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நேற்று தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது பந்தாடப்பட்டனர். கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமித்ஷா மற்றும் நரேந்திர மோடி உத்தரவால் இது நடத்தப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது'' என்றார்.

தொடரும் கைது நடவடிக்கை
இதற்கிடையே இன்று 11.05 மணியளவில் ராகுல்காந்தி பிரியங்கா காந்தியுடன் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் புறப்பட்டு சென்றனார். இதையடுத்து அவரை பின்தொடர்ந்து செல்ல முயன்ற தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications