"மாஸ்டர் மைண்ட்" கெஜ்ரிவால் தான்.. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆதாரம் இருக்கு! அமலாக்க துறை பரபர
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அப்போது அவர்கள் தரப்பு சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
டெல்லியில் கடந்த 2021-22 காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கை இப்போது ஆம் ஆத்மிக்கு மிக பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார்.

பரபர கருத்து: இதற்கிடையே அமலாக்கத் துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் கெஜ்ரிவால் தான் மாஸ்டர் மைண்ட் என்றும் அவர் தான் முக்கிய குற்றவாளி என்றும் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதில் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான எஸ்.வி.ராஜு கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிக்கை விடுத்தார். மேலும் அவர், "இந்த ஊழல் மூலம் கிடைத்த பணத்தை கெஜ்ரிவால் தான் பயன்படுத்தி இருக்கிறார். மேலும், மதுபான கொள்கை வகுப்பதில் கெஜ்ரிவால் நேரடியாக ஈடுபட்டு இருக்கிறார். சில தனியார் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கி அவர்களுக்குச் சாதகமாக மதுபான கொள்கையை உருவாக்கி உள்ளனர்" என்றார்.
தொடரும் கைதுகள்: "சவுத் குரூப்" என்ற லாபி க்ரூப் விஜய் நாயர் என்பவர் மூலம் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு ரூ.100 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்தது என்பதே புகாராகும். இதில் விஜய் நாயர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், பிஆர்எஸ் தலைவர் கேசிஆர் மகள் கவிதா கடந்த வாரம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஜய் நாயர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு அருகிலேயே தங்கி உள்ளார். மதுபான கொள்கை தொடர்பாகவும் அதில் பெறப்படும் லஞ்ச பணத்தை ஆம் ஆத்மிக்கு தருவதிலும் விஜய் நாயர் முக்கிய பங்கு வகித்ததாக அமலாக்கத் துறை கூறுகிறது. பஞ்சாப் தேர்தலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் இந்த சவுத் லாபியிடம் இருந்து ₹100 கோடி கேட்டதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆலாக்க துறை: மேலும், இது தொடர்பாக கெஜ்ரிவால் கவிதாவைச் சந்தித்து மதுபான கொள்கையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியதாகவும் அமலாக்கத் துறை கூறியுள்ளது. இந்த ரூ.100 கோடி மட்டுமின்றி மதுபான விற்பனையில் ஒரு பகுதியும் ஆம் ஆத்மிக்கு தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஆம் ஆத்மி குறிப்பிட்ட அளவுக்குப் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
2021-22 ஆம் ஆண்டில் கோவா தேர்தல் பிரச்சாரத்தில் இந்த சவுத் லாபியிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ₹45 கோடியை ஆம் ஆத்மி பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்களைச் சேகரிக்கும் பணிகளில் இப்போது ஈடுபட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. பெரிய அளவில் பணம் கை மாறியதாகத் தெரிவித்துள்ள அமலாக்கத் துறை, அதில் கெஜ்ரிவால் தான் முக்கிய குற்றவாளி என்றும் கூறியுள்ளது.
கெஜ்ரிவால் சொல்வது என்ன: கெஜ்ரிவால் நேற்று இரவு அமலாக்கத் துறை காவலில் இருந்தார். தனது கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்த நிலையில், அதை அவர் வாபஸ் பெற்றார். அதற்கு பதிலாக அவர் காவலில் எடுப்பதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டை நாட முடிவு செய்துள்ளார். கைதுக்குப் பிறகு பேசிய முதல்முறையாக கெஜ்ரிவால். "சிறையில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் நாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்" என்று கூறியுள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications