ஜாமீன் பெற்றாலும் விடமாட்டோம்.. கெஜ்ரிவாலை சுத்துப்போடும் அமலாக்கத்துறை.. 9வது சம்மனால் புது சிக்கல்
டெல்லி: சம்மனை புறக்கணித்து விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார் என அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. இத்தகைய சூழலில் தான் தற்போது அமலாக்கத்துறை அதிரடியாக 9 வது சம்மனை அனுப்பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கூறியுள்ளது. இப்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய சிக்கலில் சிக்கி உள்ளார்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இவருக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இதற்கிடையே தான் ஆம்ஆத்மி தலைவர்கள் தொடர்ந்து அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஆம்ஆத்மி கட்சி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கெஜ்ரிவால் அரசு கொண்டு வந்த டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் பூதாகரமாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டு தான் தற்போது ஆம்ஆத்மி கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. அதாவது டெல்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல், முறைகேடு புகார் எழுந்த நிலையில் அது கைவிடப்பட்டது.
‛மோடி என கோஷமிடும் கணவருக்கு உணவு கொடுக்காதீங்க’.. பெண்களிடம் கூறிய கெஜ்ரிவால்! கிளம்பிய விவாதம்
ஆனாலும் கூட சிபிஐ விசாரித்தது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டதால் அமலாக்கத்துறையும் நுழைந்தது. இந்த வழக்கில் ஆம்ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பு பிரிவை சேர்ந்த நிர்வாகி விஜய் நாயர், 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விஜய் நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அதோடு டெல்லி துணை முதல்வராகவும், கலால்துறை அமைச்சராகவும் இருந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் எம்பியும் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரித்தது. இதற்கிடையே தான் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலிடம் விசாரிக்க 8 முறை சம்மன் அனுப்பியது. அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
டெல்லி மதுபான கொள்கை வழக்கு.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரும் நிம்மதி.. ஜாமீன் அளித்தது நீதிமன்றம்
இதையடுத்து கெஜ்ரிவால் சம்மன்களை புறக்கணிப்பதாக 2 புகார் மனுக்களை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. இதுதொடர்பான விசாரணைக்கு நேற்று கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அமலாக்கத்துறை சம்மன்களை தவிர்ப்பது தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி கூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா உத்தரவிட்டார். மேலும் புகார்கள் தொடர்பான ஆவணங்களை கெஜ்ரிவாலிடம் வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
நீதிமன்றத்தில் இந்த உத்தரவு என்பது அமலாக்கத்துறைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பி உள்ளது. நேற்றைய தினம் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று அமலாக்கத்துறை 9 வது சம்மனை அனுப்பி உள்ளது. அதில் வரும் 21ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் அமலாக்கத்துறை விடாமல் 9 வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம்ஆத்மி கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications