Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி சர்ச்சை.. பிபிசிக்கு கோடிக்கணக்கில் அபராதம் போட்ட அமலாக்கத்துறை.. இயக்குநர்களையும் விடலையே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த வன்முறை தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டில் ஆவணப்படம் வெளியிட்டு பிபிசி நிறுவனம் சர்ச்சையில் சிக்கியது. அதன்பிறகு அமலாக்கத்துறை சார்பில் பிபிசி சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இப்போது பிபிசி நிறுவனம் மற்றும் அதன் 3 இயக்குநர்களுக்கு தனித்தனியே அமலாக்கத்துறை கோடிக்கணக்கில் அபராதம் விதித்து அதிரடி காட்டி உள்ளது.

நம் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். இவர் கடந்த 2002ம் ஆண்டில் குஜராத்தில் முதல்வராக இருந்தார். அந்த சமயத்தில் குஜராத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக கடந்த 2023ம் ஆண்டில் பிபிசி ஆவணப்படம் வெளியிட்டது.

bbc ed enforcement directorate

அதில் நரேந்திர மோடி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த படத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திரையிட தடை விதிக்கப்பட்டது. அதோடு பிற தளங்களில் படங்கள் வெளியிடப்படாமல் தடுக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டது.

அதன்பிறகு அடுத்த சில நாட்களிலேயே டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி இருந்தனர். இது சர்ச்சையை கிளப்பியது. அதன்பிறகு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதில் முறைகேடு செய்துள்ளதாக பிபிசி நிறுவனத்துக்கு எதிராக அமலாக்க துறை வழக்கு பதிவு செய்தது. இதனை எதிர்க்கட்சிகள் கண்டித்தன. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மத்திய அரசு பிபிசி நிறுவனத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டின.

இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அமலாக்கத்துறை சார்பில் பிபிசி இந்தியா நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம். அதாவது அந்நிய செலாவணி மீறல் தடுப்பு சட்டம் (பெமா) கீழ் பிபிசி நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை ரூ.3.44 கோடியை அபராதமாக விதித்துள்ளது.

அதேபோல் பிபிசியின் 3 இயக்குநர்களுக்கு தலா ரூ.1.14 கோடி என்று மொத்தம் 3.42 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் சேர்த்து பார்த்தால் பிபிசி நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.6.86 கோடி அமலாக்கத்துறையால் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2021 அக்டோபர் 15ம் தேதி முதல் விதிமீறிய ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5 ஆயிரம் என்று பிபிசி நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.3 கோடியே 44 லட்சத்து 48 ஆயிரத்து 850 விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விதிமீறல் காலத்தில் மேற்பார்வையிட தவறியதாக பிபிசி நிறுவனத்தில் 3 இயக்குநர்களான கில்ஸ் ஆண்டனி ஹன்ட், இந்து சேகர் சின்ஹா ​​மற்றும் பால் மைக்கேல் கிப்பன்ஸ் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடியே 14 லட்சத்து 82 ஆயிரத்துக்கு 950 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதம் என்பது அந்நிய நேரடி முதலீடு விதிகளை பிபிசி நிறுவனம் மீறியதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிபிசி இந்தியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதமாக குறைக்காமல் 100 சதவீதமாக வைத்து செயல்பட்டு வந்தது. இதுதான் அபராதம் விதிப்பதற்கு மிகவும் முக்கிய காரணமாகும்.

இதுபற்றி பிபிசியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛பிபிசி நிறுவனம் இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. தற்போது வரை பிபிசி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் இருந்து எந்த விவரமும் அளிக்கவில்லை. அவர்கள் தரும் விவரத்தின் படி பொருத்தமான அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி பரிசீலனை செய்வோம்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+