இயற்கை அரக்கன்! இந்தியாவை தாக்கும் மான்ஸ்டர் எல் நினோ.. மாபெரும் பஞ்சம் ஏற்படுமாம்.. அதிர்ச்சி தகவல்
டெல்லி: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் எல் நினோ (El Nino) காலநிலை மாற்றம், நடப்பு 2026ம் ஆண்டில் ஒரு மான்ஸ்டர் எல் நினோ எனப்படும் மாபெரும் இயற்கை அரக்கனாக உருவெடுத்துள்ளதாகச் சர்வதேசக் காலநிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன. இதன் காரணமாக, ஒட்டுமொத்த ஆசியக் கண்டமும் வரலாறு காணாத வெயில் மற்றும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த முதற்கட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து, தற்போது பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அதீத மாற்றங்கள் இந்தியப் பொதுப் பருவமழை மற்றும் விவசாயத்திற்குப் புதிய முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளன.

அது என்ன 'மான்ஸ்டர்' எல் நினோ?
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதீதமாக உயர்வதையே எல் நினோ என்கிறோம். தற்போதைய சூழலில், பசிபிக் கடலின் அடி ஆழத்தில் ஏற்பட்டுள்ள அதிவேக வெப்ப மாறுதல்களால், ஜூன் மாதத்திற்குள் எல் நினோ தனது உச்சக்கட்டப் பாய்ச்சலைத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உருவாகியிருக்கும் எல் நினோ, சாதாரணமானதாக இருக்காது என்றும், வீரியமிக்க ஒரு மெகா எல் நினோ அலையாக மாறும் என்றும் உலக வானிலை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
எமனாக வந்து நிற்கிறது
இந்தியாவின் வாழ்வாதாரமாக விளங்கும் தென்மேற்குப் பருவமழைக்கு இந்த எல் நினோ ஒரு மிகப்பெரிய எமனாக வந்து நிற்கிறது.
1. வழக்கத்தை விடக் குறைவான மழை: இந்த ஆண்டு பருவமழையானது வழக்கமான சராசரியில் வெறும் 92 விழுக்காடு மட்டுமே பெய்யும். இது இயல்வை விட குறைவானதாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. பருவமழையில் தாமதம்: கேரளக் கடற்கரையில் ஜூன் தொடக்கத்தில் வழக்கமாகத் தொடங்க வேண்டிய பருவமழை, அரபிக்கடலில் உருவாகி வரும் புதிய புயல் மற்றும் காற்றின் வேகம் குறைந்ததன் காரணமாகக் கடுமையான இழுபறியைச் சந்தித்துள்ளது. எல் நினோவின் தாக்கத்தால் பருவமழை மேலும் பலவீனமடைந்து, நீண்ட வறண்ட நாட்களை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.
2023-ன் கசப்பான பாடம்
இதற்கு முன்பு கடந்த 2023 ஜூன் மாதத்தில் தொடங்கிய எல் நினோ அலை, தொடர்ந்து 11 மாதங்கள் நீடித்து 2024 ஏப்ரல் வரை ஒட்டுமொத்த உலகையும் வாட்டி வதைத்தது. அதன் விளைவாகவே 2024ம் ஆண்டு வரலாற்றின் மிக வெப்பமான ஆண்டாகப் பதிவானது. அப்போதே இந்தியாவின் நெல், பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அசுர வேகத்தில் சரிந்து, சந்தையில் உணவுப் பணவீக்கம் விண்ணைத் தொட்டது. தற்போது, நாடு அந்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் 2026ல் மீண்டும் ஒரு 'மான்ஸ்டர்' எல் நினோ கிளம்பியிருப்பது விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன செய்ய வேண்டும்!
வானம் பார்த்த பூமியாக இருக்கும் இந்திய விவசாயத்திற்கு, எல் நினோ தரும் அச்சுறுத்தல் என்பது வெறும் வானிலை மாற்றம் மட்டுமல்ல.. அது சாமானிய மக்களின் தட்டில் இருக்கும் சோற்றுக்கான சவால்! பருவமழை பொய்த்தால் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் எகிறக்கூடும். 'வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்' என்ற தத்துவத்தின்படி, மத்திய மாநில அரசுகள் இப்போதே நீர் மேலாண்மைத் திட்டங்களை முடுக்கிவிட்டு, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மாற்றுப் பயிர்ச் சாகுபடிக்கு விவசாயிகளை தயார்ப்படுத்துவதே 2026ன் ஆகச்சிறந்த முன்னெச்சரிக்கை வியூகமாக இருக்கும்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications