பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
டெல்லி: தேர்தல் பிரச்சாரத்தின்போது மதத்தை தொடர்புபடுத்தி பிரதமர் நரேந்திர மோடி பேசியது தொடர்பான புகாரில், பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் ராஜஸ்தானில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய போது "காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை என்று சொன்னார்கள். இதன் பொருள், நாட்டு மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் கொடுத்துவிடுவார்கள்.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, முஸ்லிம்களுக்கு முதல் உரிமை என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." என்று பிரதமர் மோடி பேசினார்.
மத ரீதியாக பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ள நிலையில், பிரதமர் மோடி மதத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார் என்றும், இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
வெறுப்பை பரப்பும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்தது. பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் முறையிட்டனர்.
இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பிரதமர் நரேந்திர மோடி பேசியது தொடர்பாக பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் கட்சியிடமும், ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
"அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பிரச்சாரகர்களின் நடத்தைக்கு முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும். உயர் பதவிகளை வகிப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications