Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் ஆணையத்துக்கு அனைத்து கட்சிகளுக்கு சமம்.. ராகுல் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டிருப்பதாகவும் இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தை என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல் காந்தி பீகாரில் இன்று பேரணியை தொடங்குகிறார். இந்நிலையில், குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் ஆணையத்துக்கு அனைத்து கட்சிகளும் சமம்.. யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஏற்கெனவே இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருக்கிறது. குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி ஏன் நீதிமன்றத்தை ஆதாரப்பூர்வமாக அணுகவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தது..

Election Commission EVM Rahul Gandhi

ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானவை. ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் தேர்தல்களை நடத்தக்கூடிய ஆணையத்தின் மீதே அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார். தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக விமர்சித்திருக்கிறார். தன்னுடைய விமர்சனங்களுக்கு ஆதாரமாக சில டேட்டாக்களையும் ராகுல் காந்தி கொடுத்திருக்கிறார். பெங்களூர் மத்திய நாடாளுமன்ற தொகுதியில் இருக்கும் மகாதேவபுரா பகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் போலியாக உருவாக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்த நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் 6ல் காங்கிரஸ் வென்றிருந்தது. ஆனால் மகாதேவபுரா தொகுதியில் சுமார் 1.14 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. அந்த தொகுதியில்தான் போலி வாக்காளர்கள் இருப்பதாக ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

இவர் கூறியிருக்கும் 1 லட்சம் போலி வாக்காளர்களில் சுமார் 12 ஆயிரம் பெயர்கள் போலியானவை என்றும், 40 ஆயிரம் பெயர்கள் போலி முகவரியில் இணைக்கப்பட்டிருப்பதாகவும், கூறியிருக்கிறார். இதில் ஹைலைட் என்னவெனில் ஒரே முகவரியில் 10,452 பேர் வசிக்கிறார்களாம். மட்டுமல்லாது புதிய வாக்காளர்களுக்கான படிவம்-6 பயன்படுத்தப்பட்டு 33,692 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் முதல் தலைமுறை வாக்காளர்கள் கிடையாது.

ஒரு மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதியில் மட்டும் இத்தனை கோளாறுகள் எனில், நாடு முழுவதும் எத்தனை வாக்களார்கள் போலியாக சேர்க்கப்பட்டிருப்பார்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் மறுபுறம் தேர்தல் ஆணையமோ, ராகுல் காந்தி பயன்படுத்திய டேட்டாக்கள் நாங்கள் வெளியிட்டது கிடையாது. அது போலியானது என்றும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ராகுல் காந்தி பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும், குற்றச்சாட்டு தவறானது என நாங்கள் நிரூபித்துவிட்டால் ராகுல் காந்தி சிறை செல்ல வேண்டும் என்று கூறி வருகின்றன. மட்டுமல்லாது, இவ்வளவு ஆதாரங்களை வைத்திருக்கும் ராகுல் காந்தி ஏன் நீதிமன்றத்தை அணுகவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறது.

இந்நிலையில் தான் டெல்லியில் இன்று இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛ இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும். வாக்களிக்கவும் வேண்டும். சட்டப்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் மூலமாகதான் பிறக்கின்றன. பிறகு எப்படி அரசியல் கட்சிகளுக்கு இடையே தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்ட முடியும்? தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை அனைவரும் சமம். யார் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு கடமையில் இருந்து பின்வாங்காது'' என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+