புல்வாமா- இன்று சத்தீஸ்கர்- தேர்தல்களுக்கு முன்பு பாதுகாப்பு படை மீது தாக்குதல்களால் எழும் கேள்விகள்
டெல்லி: ஒவ்வொரு முக்கியமான தேர்தலுக்கும் முன்பாக புல்வாமா, சத்தீஸ்கர் என பாதுகாப்பு படையினர் மீதான தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள் தாக்குதல்கள் தொடர்பாக அரசியல் களத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஒட்டுமொத்த தேசமும் படுபிஸியாக இருந்தது. 2019 பிப்ரவரி 14-ந் தேதியன்று அந்த கொடூர தாக்குதல் ஜம்மு காஷ்மீரில் நிகழ்த்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் 78 பேருந்துகளில் 2,000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 40 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். இது ஒட்டுமொத்த தேசத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பாலகோட் தாக்குதல்
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக 2019-ம் ஆண்டு பிப்ரவரி 26-ந் தேதியன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி சென்றன. அங்கே பதுங்கியிருந்த தீவிரவாத முகாம்களை அழித்தன இந்திய போர் விமானங்கள். இத்தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலும் பாலகோட் பதிலடியும் தேர்தல் களத்தில் பெரும் பேசுபொருளாக இருந்தது.

அர்னாப் கோஸ்வாமி
இருந்தபோதும் புல்வாமாவில் இத்தனை ஆயிரம் பாதுகாப்பு படையினர் பயணிக்கும் போது அவர்களுக்கான பாதுகாப்பில் எப்படி குளறுபடி நிகழ்ந்தது? அதுவும் 350 கிலோ வெடிமருந்துடன் எப்படி ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி இந்த தாக்குதலை நடத்தி இருக்க முடியும்? என்ற எதிர்வினாக்களும் தேர்தல் களத்தில் அனல் பறந்தது. புல்வாமா தாக்குதலின் பின்னணி தொடர்பான சந்தேக அலைகள் ஓயாத நிலையில் இது தொடர்பான பல புதிர்களை அர்னாப் கோஸ்வாமி என்னும் வலதுசாரி பத்திரிகையாளரின் வாட்ஸ் அப் உரையாடல்கள் அவிழ்த்துவிட்டன.

விலகாத சந்தேகங்கள்
புல்வாமா தாக்குதல் முன்னரே நடக்கும் என யூகிக்கப்பட்ட ஒன்றாகவும் இதனை தேர்தல் பிரசாரத்துக்கு வலதுசாரிகள் பயன்படுத்துவதில் முனைப்பாக கொண்டாட்டமாக இருந்ததும் அந்த உரையாடல்களில் அம்பலமானது. அத்துடன் பாலகோட் வான்வழித் தாக்குதல் தொடர்பாக சில தினங்களுக்கு முன்னரே அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப்பில் உரையாடியதும் வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் புல்வாமா தாக்குதலின் பின்னணி தொடர்பான சந்தேகங்கள் இன்னமும் விலகவில்லை.

சத்தீஸ்கர் தாக்குதல்
இந்த நிலையில் தற்போது தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் 2 கட்ட வாக்குப் பதிவும் நடைபெற்று முடிந்துவிட்டது. இந்த நிலையில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் ஒன்றை நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

மாவோயிஸ்டுகள் வியூகம்
ஒவ்வொரு கோடைகாலத்திலும் மாவோயிஸ்டுகள் இதுபோல தாக்குதல்களை நடத்துவது வழக்கம் என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அப்படி மாவோயிஸ்டுகள் யுத்தத்துக்கு தயாராக இருப்பார்கள் என தெரிந்தும் அதே கோடை காலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதை எதிர்பார்த்து காத்திருந்த மாவோயிஸ்டுகள் கொடூரமாக துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதனால் இன்று 22 பாதுகாப்ப்பு படையினரை இந்த தேசம் இழந்துள்ளது.

தவறான உளவு தகவல்?
இந்த தாக்குதலின் மீதான சந்தேகங்களும் அரசியல் களத்தில் எழுப்பப்படாமல் இல்லை. உளவுத்துறை தகவலில் எந்த குறையும் இல்லை என்கிறார் சி.ஆர்.பி.எப் இயக்குநர் குல்தீப்சிங். ஆனால் உளவுத்துறை தகவலில் பிழை எதுவும் இல்லை எனில் எப்படி இத்தகைய உயிரிழப்புகள் ஏற்பட்டது என்கிற கேள்விகளுக்கு மட்டும்தான் விடை ஏதும் இல்லை.. அத்தனையும் மர்மங்களாக தொடருகின்றனவே!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications