EPFO அலர்ட்.. இனி ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்க பிரச்சினையே இல்லை.. குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு
டெல்லி: பொதுவாக நாம் எதாவது எமர்ஜென்சி என்றால் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இருந்து பணத்தை எடுப்போம். ஆனால், அது பிராசல் செய்து பணம் வர நமக்கு நீண்ட காலம் ஆகிவிடும். இந்த பிரச்சினையைத் தீர்க்கவே EPFO அமைப்பு இப்போது முக்கியமான ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவசரக் காலத்தில் கடன் வாங்க வேண்டாம் என நினைக்கும் ஊழியர்கள் பலரும் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இருந்து பணத்தை எடுப்பார்கள். ஆனால் அப்படிப் பணம் எடுத்தாலும் அது நமது கைகளில் வர பல காலம் ஆவதாகப் புகார்கள் இருந்தது. இந்த பிரச்சினையைக் கருத்தில் கொண்டே இபிஎஃப்ஓ-ல் முக்கியமான மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

முக்கிய மாற்றம்
அதாவது இதுவரை ஒரு லட்சம் வரையிலான தொகை மட்டுமே இபிஎஃப்ஓ ஆட்டோமெடிக் செட்டில்மெண்ட் மூலம் க்ளியர் ஆகி வந்தது. இந்த ஆடோமெடிக் கிளைம் செட்டில்மென்ட் வரம்பு இப்போது ஐந்து லட்சமாக ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.. இதன் மூலம் உறுப்பினர்கள் அவசரத் தேவைகளின்போது விரைவாகவும், எளிதாகவும் பணத்தை எடுக்க முடியும்.
கொரோனா காலத்தில்
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட போது மக்கள் பலரும் வேலையிழந்தனர். மேலும், அப்போது நோய் பாதிப்புகளும் அதிகரித்தன. இதனால் பொதுமக்கள் விரைவாக தங்கள் இபிஎஃப்ஓ கணக்கில் இருந்து பணம் எடுக்க ஆடோமெடிக் செட்டில்மெண்ட் ஆப்ஷனை மத்திய அரசு கொண்டு வந்தது. அதற்கு முன்பு வரை கோரிக்கைகளை அதிகாரி ஒருவரே பரிசீலிப்பார். இதனால் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
கொரோனா காலத்தில் காலதாமதம் ஏற்படுவதைத் தடுக்க ஆட்டோமெடிக் செட்டில்மென்ட் கொண்டு வரப்பட்டது. அவசரக் காலங்களில் இது பலருக்கும் கை கொடுத்தது. இதன் மூலம் மக்கள் விரைவாகப் பணத்தை எடுக்க முடிந்தது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட போது ஆடோமெடிக் கிளைம் செட்டில்மென்ட் வரம்பு ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது. இந்த சூழலில் தான் உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நெட்டிசன்கள் வரவேற்பு
மத்திய அரசின் இந்த நடவடிக்கையைப் பலரும் வரவேற்றுள்ளனர். இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டியே ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், "இபிஎஃப்ஓ அமைப்பின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஆடோமெடிக் கிளைம் செட்டில்மென்ட் வரம்பை ஐந்து லட்சமாக உயர்த்தியது, அவசரக் காலத்தில் பணம் தேவைப்படுபவர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். சொந்த பணத்தை விரைவாக எடுப்பது வசதி மட்டுமில்லை.. அது அவர்களுக்குக் கண்ணியத்தையும் கொடுக்கும். இது ஒரு சிறந்த நடவடிக்கை" என்று பதிவிட்டுள்ளார்.
அதிகரிக்கும் கணக்குகள்
ஏப்ரல் 2025இல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 19.14 லட்சம் உறுப்பினர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். இது மாதமான மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 31.31 சதவீதம் அதிகமாகும். மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 1.17 சதவீதம் அதிகமாகும். இது குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கூறுகையில், "வேலைவாய்ப்பு வாய்ப்புகள் அதிகரிப்பு, ஊழியர் நலன்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் விழிப்புணர்வு திட்டங்கள் காரணமாகவே புதிய உறுப்பினர் சேர்க்கை அதிகரித்துள்ளது" என்றார்.
18 முதல் 25 வயது வரையிலான பிரிவில் இருந்தே அதிகபட்சமாக 4.89 லட்சம் புதிதாக இணைந்துள்ளனர். இது மொத்த புதிய சந்தாதாரர்களில் 57.67 சதவீதமாகும். மேலும், ஏற்கனவே உறுப்பினராக இருந்து சில காலம் அகவுண்ட் இன்ஆக்டிவாக இருந்தவர்களில் சுமார் 15.77 லட்சம் பேர் மீண்டும் இபிஎஃஓவில் இணைந்துள்ளனர். மாநிலங்களின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் தான் அதிகபட்ச இபிஎஃஓ கணக்குகள் உள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications