காங்கிரஸ் ஆம் ஆத்மி இணைந்தாலும் பாஜகவை வீழ்த்த முடியாது.. டெல்லி இதுதான் நிலை! பரபர ஏபிபி சர்வே
டெல்லி: விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் டெல்லியில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து ஜீ நியூஸ் நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு சனிக்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை ஒரு பக்கம் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

டெல்லி அரசியல்: மற்றொருபுறம் அரசியல் கட்சிகளும் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பல மாநிலங்களில் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில் தலைநகர் டெல்லியில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆம் ஆத்மி இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது.
இந்த லோக்சபா தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடும் என்ற தொகுதிப் பங்கீடு எட்டப்பட்டுள்ளது. நியூ டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும் சாந்தினி சௌக், வடகிழக்கு மற்றும் வடமேற்கு டெல்லி தொகுதிகளில் காங்கிரஸும் போட்டியிடும் என்று முடிவெடுக்கப்பட்டது.
வீழ்த்த முடியாது: இரு கட்சிகள் சேர்ந்து இந்த தேர்தலில் போட்டியிட்டாலும் கூட டெல்லியில் லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியாது என்று ஏபிபி- சிவோட்டர்ஸ் இணைந்து நடத்திய சர்வேயில் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் மொத்தம் இருக்கும் ஏழு லோக்சபா தொகுதிகளையும் பாஜக தான் அள்ளும். இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி என இரு கட்சிகளுக்குமே எந்தவொரு சீட்டும் கிடைக்காது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்த வரையில், பாஜக 57 சதவிகித வாக்குகளைப் பெறும் என்றும் இந்தியா கூட்டணி 36% வாக்குகளைப் பெறும் என்று ஏபிபி- சிவோட்டர்ஸ் இணைந்து நடத்திய சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
2019 லோக்சபா தேர்தல்: கடந்த 2019இல் டெல்லியில் நடந்த லோக்சபா தேர்தலிலும் பாஜக மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் வென்று இருந்தது. பாஜகவுக்கு அங்கே 56% வாக்குகள் கிடைத்தன. அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்கு 22% வாக்குகள் கிடைத்த போதிலும் அவர்களால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. ஆம் ஆத்மி 18% வாக்குகளைப் பெற்ற போதும் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை தேர்வான 7 எம்பிகளில் 6 பேருக்கு பாஜக இந்த முறை வாய்ப்பு தரவில்லை. அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றும் அவர்கள் மீது டெல்லி மக்கள் அதிருப்தியில் இருப்பதாலேயே கவுதம் கம்பீர் உள்ளிட்ட 6 பேருக்கு அக்கட்சி மீண்டும் வாய்ப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications