மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லை.. மாநில அரசு என்ன செய்தது? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லை எனவும் மேற்கு வங்க அரசு என்ன செய்து கொண்டிருந்தது என்றும் சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், ஆர்.ஜி கர் மருத்துவமனைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக 31 வயது நிரம்பிய பெண் பணியாற்றி வந்தார். மருத்துவ மேற்படிப்பை படித்து பயிற்சி டாக்டராக இந்த மருத்துவமனையில் பணி செய்து வந்தார். வழக்கம் போல கடந்த 8 ஆம் தேதி இரவு பணியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.

kolkata supreme court doctor murder case

அப்போது, அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அந்த பயிற்சி டாக்டர் அரை நிர்வாணமாக சடலமாக கிடந்தார். உடற்கூராய்வில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் தான் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரனை நடத்தியது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா விசாரித்தனர். அப்போது, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யபட்ட வழக்கை ஏன் தாமதமாக முதல் தகவல் அறிக்கை பதிவானது என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் அதுவரை மருத்துவமனை நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது. மாநில அரசால் ஏன் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் போனது என்று காட்டமாக நீதிபதிகள் மாநில அரசுக்கு கேள்வி எழுப்பினர். மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கே பாதுகாப்பான சூழல் இல்லை என்றும் நீதிபதிகள் விமர்சித்தனர். மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, தேசிய அளவில் குழு ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டனர்.

kolkata supreme court doctor murder case

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு-உச்ச நீதிமன்றம் அதிரடி..யார் யாருக்கு இடம்?


பணிபுரியும் இடங்களில் மருத்துவர்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு உரியதாகவே உள்ளது. பயிற்சி மருத்துவரின் உயிரிழப்பானது மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. இது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கின் விசாரணை நிலையை அறிக்கையாக சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். வரும் வியாழக்கிழமைக்குள் முழு அறிக்கையையும் தாக்கல் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

முன்னதாக இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். கொல்கத்தா கர் அரசு மருத்துவமனையிலும் டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று ஆளும் மம்தா பானர்ஜியின் அரசை கண்டித்து பாஜகவினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+