தரவுகளில் முறைகேடு செய்தால் ரூ.250 கோடி அபராதம்! 4 புதிய சட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்கள்? விவரம்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கடும் அமளிக்கு மத்தியில் கொண்டு வந்த 4 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டங்களால் சாதாரண பொதுமக்களுக்கு எப்படி பயன் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கடந்த மாதம் 20 ஆம் தேதி கூடியது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. அமளிக்கு மத்தியிலும் சில மசோதக்களை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது .

டெல்லி நிர்வாக மசோதா, தனி நபர் தரவு பாதுகாப்பு மசோதா, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) மசோதா, ஜன் விஸ்வாஸ் (திருத்த) மசோதா ஆகியவை முக்கிய மசோதக்கள் ஆகும். நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்முவும் ஒப்புதல் அளித்து இருப்பதால் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டங்களால் சாதரண பொதுமக்களுக்கு எந்த விதமான தாக்கங்கள் ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா: டிஜிட்டல் தனி நபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதியும் மாநிலங்களவையில் ஆகஸ்ட் 9ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி, தனிநபர்களின் தரவுகளை பாதுக்காக தவறினாலோ, முறைகேடாக பயன்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ. 250 கோடி அபராதமாக விதிக்கப்படும்.
தரவுகளை கையாளும் நிறுவனங்கள் தனிநபரின் தகவல்களை பாதுகாக்க வேண்டும். தனிப்பட்ட தகவல்கள் முறைகேடு செய்யப்படுவது தெரிந்தால் தரவு பாதுகாப்பு வாரியம் (DPB)த்திடம் யூசர் புகார் அளிக்கலாம். சிறார்களின் தரவுகளை கார்டியன்களின் ஒப்புதல் இன்றி பெறக்கூடாது என்ற விதியும் இடம் பெற்றுள்ளது. தனியார் நிறுவனங்கள் மட்டும் இன்றி அரசு நிறுவனங்கள் இந்த சட்டத்தின் கீழ் வரும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) மசோதா: பல்வேறு சேவைகளுக்கும் ஒற்றை ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்த வழிவகை செய்யும் வகையில் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதாவது, கல்வி நிறுவனங்களுக்கு அட்மிஷன், அரசு பணிகளில் சேருவது முதல் , டிரைவிங் லைசன்ஸ், ஆதாா், திருமணப் பதிவு உள்ளிட்டவைகளுக்கும் பிறப்பு சான்றிதழை ஒற்றை ஆவணமாக பயன்படுத்த முடியும்.
ஜன் விஸ்வாஸ் (திருத்த) மசோதா: தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில், இந்த மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 42 சட்டங்களில் காணப்படும் சுமாா் 180 சிறு குற்றங்கள் கிரிமினல் குற்றப்பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. சில ஃபைன்களை பெனால்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதன் வித்தியாசம் என்னவென்றால் ஃபைன்கள் என்றால் நீதிமன்றம் மூலமே செலுத்த முடியும்.
இதனால், ஏற்படும் சிக்கல்களை குறைக்க மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் சில குற்றங்களுக்கு சிறை தண்டனை என்பது நீக்கப்பட்டுள்ளது. முன்பு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அந்தக் குற்றங்கள் இப்போது இந்த திருத்த மசோதா மூலம் அபராதம் விதிக்கும் குற்றங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. மருந்து தயாரிப்பு, ஊடகங்கள், விவசாயம், சுற்றுச்சூழல், தொழில் நிறுவனங்கள் ஆகியவை தொடா்பான துறைகளுக்கு பொருந்தும் என கூறப்படுகிறது.
டெல்லி நிர்வாக மசோதா: டெல்லியில் அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கே அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறிய இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா சட்டம் ஆகியுள்ளதன் மூலம், டெல்லியில் அதிகாரிகளின் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்டவற்றை முடிவு செய்ய தேசிய தலைநகர் சிவில் சேவை ஆணையம் உருவாக்கப்பட உள்ளது.
இந்த ஆணையத்தில் முதல்வர், முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள். மத்திய அரசால் இரு செயலாளர்களும் நியமனம் செய்யப்படுவார்கள். ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகள் துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரையாக அனுப்பப்படும். இந்த பரிந்துரையை துணை நிலை ஆளுநர் நிராகரிக்கவோ, மறுபரிசீலனைக்கு அனுப்பவோ முடியும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications