பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!
டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு மருத்துவ மேற்படிப்பில் 10% இடங்களை ஒதுக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், ஏ.எஸ். போபண்ணா, சூர்யகாந்த் ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் பல கட்ட விசாரணைகள் நடந்து முடித்துள்ளன.

மருத்துவ மேற்படிப்பில் 10% இடஒதுக்கீடு
மத்திய அரசின் ஆணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் இதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இல்லை என்று கூறினார்கள். இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த விசாரணை குழு அறிக்கை கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினராக கருதப்படுவர் என அறிக்கை தெரிவித்தது.

இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு
இந்த வழக்கு நீண்ட நாட்களாக நடந்து வரும் நிலையில் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே வாதிட்டது. இதனை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு நீதிபதிகள் சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் நேற்று வழக்கை விசாரித்தனர். மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தத்தார், ஷியாம் திவான் மற்றும் பி வில்சன் ஆகியோர் வாதாடினார்கள்.

'விளையாட்டின் விதிகளை நடுவழியில் மாற்றுவது" போன்றது
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், அடுத்த ஆண்டு முதல் புதிய இடஒதுக்கீடு முறை அமலுக்கு வர வேண்டும் என்று வாதிட்டார். EWS மற்றும் OBC ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான ஜூலை 29 அறிவிப்பைக் குறிப்பிட்ட அவர், தேர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு இடஒதுக்கீடு கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதால், "விளையாட்டின் விதிகளை நடுவழியில் மாற்றுவது" போன்றது என்றார்.

இன்று முக்கிய தீர்ப்பு
EWS பிரிவினருக்கான வருமான வரம்பு ரூ.8லட்சம். அதாவது மாத வருமானம் ரூ.70000 ஆகும். அவர்களை ஆனால் ஏழைகளாக கருத முடியாது. ஆனால் அவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள். ஏழைகளை விட அவர்கள் சிறிதளவே மேம்பட்டவர்கள் என்று மத்திய அரசு வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நாளை(இன்று) தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று ஒத்திவைத்தனர்.நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு இறுதி தீர்ப்பை அறிவிக்கின்றனர். மத்திய அரசு பிறப்பித்த ஆணை செல்லுபடியாகுமா? என்பது இன்று காலை தெரிய வரும்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications