ரேஷன்தாரர்களுக்கு மேஜர் தகவல்.. ரேஷன் அட்டையில் "இதை" செய்துட்டீங்களா? eKYC - என்றால் என்ன தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரேஷன் கார்டுகள் இன்றைய சூழலில், அதிமுக்கியமான ஆவணமாகிவிட்ட நிலையில், தற்போது முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.. என்ன அது?
வீட்டு முகவரி ஆவணமாக பல இடங்களில் ரேஷன் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.. ரேஷன் கார்டு தேவை என்கிறபோதுதான், அதை எப்படி விண்ணப்பிப்பது என்றே பலரும் அறிய முற்படுகிறார்கள்.. பொதுமக்களின் வசதிக்காகத்தான், ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் முறையை அரசு செயல்படுத்தி உள்ளது.

ஆன்லைன்: அதேபோல ஆன்லைனிலேயே புதிய ரேஷன் கார்டுக்கும் விண்ணப்பித்து கொள்ளலாம்.. அப்படி விண்ணப்பிக்கும் முன்பு, பழைய ரேஷன் கார்டில் இருந்து உங்களின் பெயரை நீக்க வேண்டும்.
அப்படி நீக்க வேண்டுமானால், அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் தெரியுமா? ஆதார் அட்டை, மின் ரசீது, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக், சாதி சான்றிதழ் போன்றவை இருந்தால் போதும்.. ஈஸியாக ஆன்லைனிலேயே திருத்தங்களை செய்து கொள்ளலாம்.

Excellent announcement and ekyc date extended for the Ration card holders

பெயர் சேர்த்தல்: எப்போதுமே, ரேஷன் கார்டுகளில், வீட்டு அட்ரஸ், வயது விவரம், எழுத்துப்பிழை இல்லாமல் பெயர், பெயரை சேர்த்தல் அல்லது நீக்குதல் என்று எல்லாவிதமான அப்டேட்டுக்களையும் தெளிவாக செய்திருக்க வேண்டும். அதிலும் புதியதாக திருமணம் ஆனவர்கள் புதிய குடும்ப உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும்.. முக்கியமாக, வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும்.

அதாவது, திருமணத்திற்குப் பிறகு ஒரு உறுப்பினர் குடும்பத்திற்கு புதிதாக வந்தால் அவரது பெயரை ரேஷன் கார்டில் கட்டாயம் சேர்க்க வேண்டும். அல்லது தனி கார்டாக கணவன், மனைவி இருவரும் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க நினைத்தால், ஏற்கனவே உங்கள் பெயர் வீட்டு ரேஷன் கார்டில் உள்ள உங்களது பெயரை நீக்கிய பிறகே, புதிய கார்டில் உங்கள் பெயரை சேர்க்க முடியும். இதையும் ஆன்லைனில் செய்து முடிக்கலாம். அல்லது பக்கத்திலுள்ள இ-ஆதார் அலுவலகம் சென்று அப்டேட் செய்யலாம்.

இணையதளம்: https://tnpds.gov.in/ என்ற இந்த தமிழக உணவு வழங்கல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குள் சென்றால், ரேஷன் கார்டு மாற்றங்கள், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற அனைத்து சேவைகளும் இருக்கும்.. ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் (1967 அல்லது 1800-425-5901) என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இப்படி பல்வேறு வசதிகளை போலவே, ரேஷன் அட்டைதாரர்களின் வசதிக்காக செய்யப்பட்டதுதான் eKYC என்பதாகும்.. Know Your Customer என்பதுதான் Kyc-யின் விரிவாக்கமாகும்.. "உங்கள் வாடிக்கையாளரை அறிவீர்" என்று இதற்கு பொருளாகும்.. அதாவது, உங்களுடைய ஆதார் கார்டினை உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கும் பணி தான் இந்த eKYC. ரேஷன் கடைகளில் eKYCக்கான தேதி மறுபடியும் நீட்டிக்கப்பட்டுள்ளது..

Excellent announcement and ekyc date extended for the Ration card holders

இதற்கான காலக்கெடு ஏற்கனவே, நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் eKYCக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாம்.. குறிப்பாக, சத்தீஸ்கர் மாநிலத்தில், eKYCக்கான தேதிகள் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போது eKYC இன் பணிகள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம்: அதேபோல, இமாச்சலப் பிரதேச அரசும் ஒரு சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. அதன்படி, ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால், ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் பலனை பெற முடியாது. உங்களின் ரேஷன் கார்டு ஆதாருடன் சரிபார்க்கப்பட்ட பிறகே, ரேஷன் வழங்கப்படும்.. அதனால், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி, சம்பந்தப்பட்ட டெப்போவுக்குச் சென்று ஆதார் பதிவு செய்வது இமாச்சலப் பிரதேசத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கர்நாடக அரசும் அதிரடியை கொண்டுவந்துள்ளது.. அம்மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் முனியப்பா இதுதொடர்பாக சொல்லும்போது, மானிய விலையில் ரேஷன் பெறுபவர்களுக்கும், மருத்துவ வசதிக்காக காரில் வருபவர்களுக்கும் தனித்தனி பிரிவுகள் அரசால் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+