ரயிலில் அடிக்கடி போவீங்களா.. ஐஆர்சிடிசியில் இப்படி ஒரு ஆப்சன் இருப்பது தெரியுமா? சூப்பர் வசதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயிலில் பயணம் செய்யும் போது ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டால், அல்லது பிரச்சனையை எதிர்கொண்டால் ஐஆர்சிடிசியில் எப்படி புகார் அளிப்பது என்பதை பார்ப்போம்.

உங்களின் விருப்பமான பயணம் எது என்று இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் யாரிடம் கேட்டாலும், சட்டென அவர்கள் ரயில் பயணம் என்று சொல்வார்கள். அதற்கு முக்கிய காரணம் ரயில் பயணம் பேருந்து பயணத்தை விட கட்டணம் குறைவாக இருக்கும். பயண நேரமும் குறைவாக இருக்கும். அலுப்பு இருக்காது, வயதானவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ரயில் பயணம் தான் நிச்சயமாக தரும்.

Facing problems with your train trip: How to file a complaint with the IRCTC?

ஒரு ஊரில் ரயிலில் போகவும் முடியும், பேருந்தில் போகவும் முடியும் என்றால், மக்கள் ரயிலைத்தான் விரும்புவார்கள். ரயிலில் டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் தான், பேருந்தில் போவார்கள். மக்களுக்கு நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் தான் சவுகரியமாக உள்ளது. விமானத்தில் செல்லும் அளவிற்கு வசதி உள்ளவர்கள் இந்தியாவில் மிகமிக குறைவு. வெகுசிலரால் தான் அப்படி போக முடியும். பேருந்தில் செல்வது கூட சாத்தியமில்லாத அளவிற்கு வருமானம் குறைவாகவே மக்கள் சம்பாதிக்கிறார்கள்.

வடமாநிலத்தில் இருந்து தென்மாநிலத்திற்கு பிழைப்பு தேடி வரும் பல லட்சம் வட இந்தியர்களுக்கு ரயில் பயணம் தான் உயிர் ஆதாரமாக உள்ளது. ஏன் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி வரவும் மக்களுக்கு ரயில் பயணம் தான் முக்கியமானதாக உள்ளது.

இந்நிலையில் ரயில் பயணங்கள் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) மூலம் எளிதாக்கி உள்ளது மத்திய அரசு. ரயில்கள் மற்றும் ரயில் பயணம் தொடர்பான அனைத்து சேவைகளும் சீராக இயங்குவதை ஐஆர்சிடிசிதான் செய்து வருகிறது.

எனினும், சில நேரங்களில் பயணிகள் தங்கள் பயணத்தின் போது கழிவறையில் தண்ணீர் வராத பிரச்சனை, ஏசி இயங்காமல் போகும் பிரச்சனை, முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறுவதால் பிரச்சனை போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதுபோன்ற சூழ்நிலைகளில், IRCTC இல் ஒரு புகாரை எவ்வாறு பதிவு செய்வது என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

ஏனெனில் ரயில் பயணிகளுக்காக பிரத்யேக ஆன்லைன் புகார் சேவையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் பயணிகள் எப்படி புகார்களை எளிதாக பதிவு செய்வது என்பதை பார்ப்போம்.

அதற்கு நீங்கள் கையில் வைத்திருக்க வேண்டியவை
PNR எண்
OTP சரிபார்ப்பிற்காக ஐஆர்சிடியில் கொடுக்கப்பட்ட மொபைல் எண்
புகார் தொடர்பான ஏதேனும் இருந்தால் புகைப்படம் அல்லது வீடியோ இருந்தால் அதையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்

இதெல்லாம் உங்கள் கையில் இருந்தால், நீங்கள் உடனே புகாரை பதிவு செய்யலாம்.

1. உங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஃபோனில் https://railmadad.indianrailways.gov.in/madad/final/home.jsp என்பதை கிளிக் செய்யுங்கள்.
2. ரயில்கள் தொடர்பான புகாரை பதிவு செய்ய, ரயில் புகார் (Train Complaint) ஆப்சனை கிளிக் செய்யவும்
3.உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு Get OTP என்பதைக் கிளிக் செய்யவும்
4. அதில் பெறப்பட்ட OTP ஐ டைப் செய்து சப்மிட் என்பதைக் கிளிக் செய்யவும்
5. இப்போது, PNR எண் மற்றும் புகாரின் வகையை நீங்கள் டைப் செய்யுங்கள்(இது புகாரின் தன்மையைக் குறிப்பிட நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய விருப்பத்தை தேர்வு செய்யுங்கள் )

6.அதில் Sub typeயைத் தேர்ந்தெடுத்து என்ன என்ன நடந்தது என்பதை பதிவ செய்யுங்கள்
7. அத்துடன் Sub type புகார் தொடர்பான புகைப்படம் அல்லது வீடியோவை அப்லோடு செய்யுங்கள்
8. இப்போது, அந்தபுகார் தொடர்பாக சிறிய விளக்கத்தை எழுதுங்கள்
9. அதனை செய்து முடித்ததும் புகாரைப் பதிவு செய்ய சப்மிட் பொத்தானைக் கிளிக் செய்யவும்

https://railmadad.indianrailways.gov.in/madad/final/home.jsp தளத்தில் ரயில் நிலையங்கள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய முடியும். அதற்கு, ஸ்டேஷன் புகார் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். பின்னர், தேவையான தகவலை டைப் செய்து பதிவு செய்ய சப்மிட் பட்டனை கிளிக் செய்யுங்கள்.

புகாரைப் பதிவுசெய்த பிறகு, நீங்கள் ஒரு குறிப்பு எண்ணைப் பெறுவீர்கள். உங்கள் புகாரின் நிலை என்ன என்பதை பார்க்க இந்த எண்ணைப் பயன்படுத்தலாம். அதில் உங்கள் புகார் சரி செய்யப்பட்டுள்ளதா என்பது தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+