ஆல்ட் நியூஸ் பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி ஹைகோர்ட்! ரிலீசாவதில் சிக்கல்
டெல்லி: ஆல்ட் பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‛ஆல்ட் நியூஸ்' என்ற பேக்ட் செக் இணையதளத்தில் இணை நிறுவனராக உள்ளவர் முகமது ஜுபைர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ள இவர், அவ்வப்போது தொடர்ச்சியாக பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்.
இந்தச் சூழலில் டெல்லி போலீசார் கடந்த ஜூன் 27இல் முகமது ஜுபைரை கைது செய்தனர். கடந்த 2018ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து இருந்ததாகவும் அது குறித்த புகாரில் முகமது ஜுபைரை கைது செய்து உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதன்பிறகு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தச்சூழலில் அவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
ஆல்ட் பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அவர் மீதான மற்றொரு வழக்கில் இன்னும் தீர்ப்பு வராத நிலையில், அவர் ஜெயிலிலேயே இருக்க வேண்டிய சூழலில் உள்ளார்.
Recommended Video
இருப்பினும், இதே விவகாரத்தில் உத்தரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இரு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications