"பணக்கார பெண்களுடன் உடலுறவு கொண்டு.. கர்ப்பமாக்கினால் ரூ.20 லட்சம் தரோம்" அலறவிடும் புதுவித மோசடி
டெல்லி: இந்தியாவில் வட மாநிலங்களில் இப்போது புதுவித மோசடி அரங்கேறத் தொடங்கியுள்ளது. அதாவது பெண்களுடன் உடலுறவு கொண்டு கருவுற வைத்தால் காசு, பணம், சொத்தை தருவதாகச் சொல்லி அப்பாவி இளைஞர்களிடம் பல லட்சம் பணம் பறிக்கும் சம்பவம் இப்போது அங்குப் பரவலாக அரங்கேறத் தொடங்கியுள்ளது.
இப்போதெல்லாம் சில மாதங்களுக்கு ஒரு முறை புது புது மோசடிகள் அரங்கேறத் தொடங்குகிறது. இதனால் ஏமாறுவது என்னவோ ஏழை மக்கள்தான். அப்படி தான் இப்போது புதுவித மோசடி ஒன்று அரங்கேறத் தொடங்குகிறது.

மோசடி: கிராமப்புற இந்தியாவில் இருக்கும் வேலையற்ற ஆண்களைக் குறிவைத்து நடத்தப்படும் இந்த மோசடியால் பல லட்ச ரூபாயை இழக்க நேரிடுகிறது. குழந்தையின்றி தவிக்கும் பணக்கார பெண்களுடன் உடலுறவு கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் கர்ப்பமாக்கினால் பெரும் தொகை தருவோம் மட்டுமின்றி சொத்திலும் கூட பங்கு தருவதாக ஆசை வார்த்தைகள் சொல்லி ஏமாற்றுகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் உள்ள க்ரூப்கள் மூலமாகவே இந்த மோசடி நடக்கிறது. அதில், "மூன்று மாதங்களுக்குள் என்னைக் கர்ப்பமாக்கினால் 20 லட்சம் ரூபாய் தருகிறேன்" என்பது போல மோசடி போஸ்ட்கள் பல சமூக வலைத்தள க்ரூப்களில் பார்க்க முடிகிறது. மேலும், இதில் ஆர்வம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு நம்பரும் விளக்கப்பட்டுள்ளது.
எப்படி: அந்த நம்பருக்கு நாம் போன் செய்தால் டிப்டாப் மொழியில் ஒருவர் பேசுகிறார். அவர், "நாங்களே அனைத்தையும் ஏற்பாடு செய்வோம். நீங்கள் சொல்லும் இடத்திற்கு கார் அனுப்புவோம். ஓட்டுநர் உங்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வார்.. அங்கு தான் மேடம் இருப்பார்கள். உங்களால் கர்ப்பமாக்க முடியவில்லை என்றாலும் ரூ. 5 லட்சம் வழங்கப்படும்" என்று ஆசை வார்த்தைகளைச் சொல்வார்கள்.
இது உண்மை தான் என்பதை நம்ப வைக்க தங்கள் மூலம் கருவுற்றவர்கள் எனப் பல பெண்களின் போட்டோக்களையும் பகிர்வார்களாம். மேலும், சிலரது ஆதார் மற்றும் பான் கார்டு போட்டோக்களை கூட பகிர்வார்களாம். ஆனால், இவை அனைத்துமே ஆன்லைனில் இருந்து திருடப்பட்டதாகவே இருக்கும்
மோசடி: அதேநேரம் இந்த வேலைக்குப் பதிவு செய்யவும் அடையாள அட்டை வழங்கவும் ரூ.999 தர வேண்டும் எனச் சொல்லி.. க்யூஆர் கோட் மூலம் கட்டணம் வசூலிப்பார்களாம். ரூ.999 தானே ஒரு முறை கொடுத்துத் தான் பார்க்கலாம் எனத் தந்தாலும் அதோடு நிற்காதாம். ஏதேதோ காரணங்களைச் சொல்லி அந்த கட்டணம் இந்த கட்டணம் எனப் பணத்தை வசூலித்துக் கொண்டே இருப்பார்கள் என்கிறார்கள் இதனால் பாதிக்கப்பட்டோர்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டே மாதங்களில் இந்த மோசடியில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்துள்ளார். அவர் மட்டுமின்றி அங்குப் பல இளைஞர்கள் இந்த மோசடியில் ஏமாந்து போய் இருக்கிறார்கள். பல லட்ச ரூபாயை இழந்தும் உள்ளனர். எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இருப்போரைக் குறிவைத்தே இந்த மோசடி நடந்து வருகிறது.
கவனம்: கடந்தாண்டு டிசம்பர் மாதமே பீகாரில் இதுபோன்ற மோசடிகள் முதலில் அரங்கேறத் தொடங்கியது. அப்போதே பீகார் காவல்துறை நவாடா பகுதியில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும், அந்த மோசடி அதோடு முடியவில்லை.. கொஞ்சக் காலத்திலேயே பல சமூக வலைத்தள பக்கங்களில் போலியாக க்ரூப் தொடங்கப்பட்டு இந்த மோசடிகள் அரங்கேறத் தொடங்கிவிட்டன.
எனவே, இளைஞர்களே கவனமாக இருங்கள்.. இதுபோன்ற கால் அல்லது மெசேஜ் வந்தால் அதை உண்மை என்று நம்பி பணத்தை இழக்காதீர்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications