"லாஸ்ட் ரைட்.." 150 கிமீ வேகம்.. பெற்றோர் டார்ச்சரால் பிக்பாஸ் பிரபலம் எடுத்த விபரீத முடிவு!
டெல்லி: பிரபல யூடியூபர் ஒருவர் 150 கிமீ வேகத்தில் காரை ஓட்டி சென்று லைவ் வீடியோ போட்டுள்ளார். தனது வாழ்க்கையில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து வருவதாகப் புலம்பிய அவர், அப்போது சட்டெனக் காரை தடுப்புகளில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆடம்பரக் கார்கள், பைக்குகள், லட்சக்கணக்கான பலோயர்ஸ், இந்தி 'பிக்பாஸ்' புகழ் என உச்சம் தொட்ட யூடியூபர் UK07 ரைடர் என்ற அனுராக் டோப்ஹால்.. இவரது ஆன்லைன் வாழ்க்கையைப் பார்க்கும்போது பலரும் பொறாமை கொள்ளும் அளவுக்கே அது இருக்கும். ஆனால், இவரது வாழ்க்கையின் மறுபக்கம் அதிர்ச்சியளிக்கிறது. புகழ் வெளிச்சத்திற்குப் பின்னால், அவர் நம்பிக்கையற்று ஆழ்ந்த துயரத்தில் இருந்துள்ளார்.

லைவ் வீடியோ
நேற்று சனிக்கிழமை, அவர் லைவ் வீடியோ ஒன்றைப் போட்ட நிலையில், அதைப் பார்த்த அனைவரும் ஒரு நொடி உறைந்து போனார்கள்.. 150 கி.மீ வேகத்தில் அவர் காரை ஓட்டி சென்றார். அப்போது, தன் தாயிடம் இருந்து தனக்கு அன்பு கிடைக்கவில்லை எனக் கண்ணீர் விட்டுப் புலம்பினார். அப்படியே பேசிக் கொண்டே திடீரென நெடுஞ்சாலை தடுப்புச்சுவரில் வேண்டுமென்றே மோதி மோசமான விபத்தை ஏற்படுத்தினார். கடந்த சில நாட்களாகவே அவரது யூடியூப் பக்கத்தில் இதுபோன்ற புலம்பல்களைக் கேட்க முடிந்தது.
புலம்பல்
சில நாட்களுக்கு முன், யூடியூபர் அனுராக் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை பகிர்ந்தார். அதில், வேறு சாதியைச் சேர்ந்த தனது காதலியைத் திருமணம் செய்ததால், குடும்பத்தினரால் தான் சித்திரவதை செய்யப்பட்டு, துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார். அந்த வீடியோவில் அவர் மேலும், "கடந்த சில மாதங்களாக என் வாழ்க்கை எதிர்பாராதவிதமாக மாறிவிட்டது. என் வாழ்க்கை இப்படி மாறும் நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. நான் கடும் மன உளைச்சலிலும், தற்கொலை எண்ணத்திலும் இருக்கிறேன். நான் எதாவது முடிவு எடுத்தால் அதற்கு எனது குடும்பத்தினரே பொறுப்பு" என கூறியிருந்தார்.
சனிக்கிழமை அவர் லைவ் போட்டபோது, டெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள காஸியாபாத்தின் மாசூரி பகுதியில் தனது டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை அவர் அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த அவரது கண்கள் சிவந்து இருந்தது. அழுது கொண்டே பேசினார். அப்போது அவர், "எனது அடுத்த பிறவியிலாவது எனக்கு அன்பு கொடுங்கள் அம்மா.. தயவு செய்து என் மீது அன்பு காட்டுங்கள்.. இப்போது எனக்கு அதுதான் தேவைப்படுகிறது." என்றார். பேசும்போதே அவரால் தனது அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தனக்குத் தைரியமும், ஊக்கமும் தேவைப்பட்டதாகவும், ஆனால் பேச யாருமில்லை என்றும் கூறினார்.
விபத்து
இந்த லைவை அப்போது 82,000க்கும் மேற்பட்டோர் பார்த்துக் கொண்டிருந்தனர். தனக்கு யாருமே இல்லை என அவர் சொன்னபோது, நெட்டிசன்கள் பலரும் அவருக்காக இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், அனுராக் அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லை. "கடைசியாக ஒரு ரைட் போவம்" எனச் சொன்ன அனுராக், கேமராவை விண்ட்ஷீல்ட் நோக்கித் திருப்பினார். அப்பொழுது அவரது எஸ்யூவி கார் 150 கி.மீ/மணி வேகத்தில் செல்வது தெரிந்தது. ஒரு பேருந்து மற்றும் மற்றொரு வாகனத்தை இடதுபுறமாக முந்திச் சென்றார். அப்போது "அனைவருக்கும் குட் பை" என கத்திவிட்டு, சட்டென ஸ்டீயரிங்கை வலதுபுறமாகத் திருப்பி தடுப்புகளில் மோதினார்.
சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த அனுராக்கை மீரட்டில் உள்ள சுபார்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.
லாஸ்ட் மெசேஜ்
'தி லாஸ்ட் மெசேஜ்' என்று இதற்கு முன்பு அவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்தி பிக்பாஸ் போட்டியாளரான அனுராக், வேறு சாதியைச் சேர்ந்த தனது காதலி ரித்திகாவை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் கொண்டதாகத் தெரிவித்தார். இருப்பினும், தங்கள் காதலைத் தனது பெற்றோர் ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும், அதனால் வீட்டில் அவர்களை வசிக்க அனுமதிக்கவில்லை என்றும் கூறினார்.
அவர் மேலும், "நான் கெஞ்சிக் கேட்டேன். காலில் விழுந்து கூட கதறினேன். அனைத்து உறவினர்கள் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். அதைச் செய்த பிறகும் அவர்கள் எங்களை ஏற்கவில்லை. நாங்களும் சந்தோஷமாக இருக்க மாட்டோம், உன்னையும் சந்தோஷமாக இருக்க விடமாட்டேன் என்று எனது பெற்றோர் மிரட்டினர். மிக மோசமான அழுத்தங்களைக் கொடுத்தனர். இதை எல்லாம் தாங்க முடியாமல் எனது காதல் மனைவி ரித்திகா கூட என்னைப் பிரிந்து சென்றுவிட்டார்" என அதில் கூறியிருந்தார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications