வார்த்தை தடுமாறியது.. உடல் சோர்வு.. பட்ஜெட் உரையை முழுமையாக வாசிக்க முடியாத நிர்மலா சீதாராமன்
Recommended Video
டெல்லி: 2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை முழுமையாக வாசித்து முடிக்க முடியாமல் சோர்வடைந்து உட்கார்ந்துவிட்டார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
காலை 11 மணியளவில் பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன். பல்வேறு வகையான அறிவிப்புகளுடன் சேர்ந்து திருக்குறள், ஆத்திச்சூடி, காளிதாசரின் கவிதை உள்ளிட்டவற்றை மேற்கோள்களைக் காட்டி அவர் தொடர்ந்து உரையாற்றினார்.

மதியம் சுமார் 1.40 மணி அளவில், அதாவது அவர் பட்ஜெட் உரையை ஆரம்பித்து சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் ஆகிய நேரத்தில், அவருக்கு கடுமையான உடல் சோர்வு ஏற்பட்டது. தண்ணீர் எடுத்து வருமாறு ஊழியர்களை கேட்டுக்கொண்டார். தண்ணீர் குடித்த பிறகும் கூட அவரது வாய் குளறியது. பேச்சு தடுமாறியதை கேட்க முடிந்தது.
அவரால் பட்ஜெட் உரையில் உள்ள சொற்களை அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கக் கூட முடியவில்லை. இதனால் அருகே அமர்ந்திருந்த மூத்த அமைச்சரான ராஜ்நாத்சிங், பட்ஜெட் உரையை வாசிக்க வேண்டாம், லோக்சபாவில் உரையை சமர்ப்பித்து விட்டதாக கூறி விட்டு அமருங்கள் என்று கட்டாயப்படுத்தினார்.

ஆனால் முதலில் அதை நிர்மலா சீதாராமன் கேட்கவில்லை. இன்னும் இரண்டு பக்கங்கள் தான் இருக்கிறது, வாசித்து விடுகிறேன் என்று கூறி மறுபடியும் வாசிக்க ஆரம்பித்தார். ஆனால், அவரால் முழுமையாக வாசிக்க முடியாத அளவுக்கு வார்த்தைகள் தடுமாறின.
ஒருகட்டத்தில் இதற்கு மேலும் நின்றுகொண்டு வாசிக்க முடியாது என்பதை உணர்ந்த அவர் பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன் என்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டார்.
எனவே அவர் முழுமையாக பட்ஜெட் உரையை வாசித்து முடிக்கவில்லை. இறுதியாக அவர் மறைமுக வரி விதிப்புகள் தொடர்பான அறிவிப்புகளை வாசித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்மலா சீதாராமனுக்கு முன்பாக நிதியமைச்சராக இருந்த, மறைந்த அருண் ஜெட்லியும் உடல்நலக்குறைவு காரணமாக அமர்ந்த நிலையிலேயே பட்ஜெட் உரையை வாசித்தது வரலாறு.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications