டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓமிக்ரான் வேரியண்ட்டின் முதல் புகைப்படம்.. டெல்டாவுடன் ஒப்பிட்டு ரோம் விஞ்ஞானிகள் வெளியீடு!

Google Oneindia Tamil News

டெல்லி: புதிய ஓமிக்ரான் வைரஸ் உருமாற்றம் அடைந்த முதல் புகைப்படத்தை இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    Omicron Symptoms என்ன? | உருமாறிய புதிய Corona Variant | Oneindia Tamil

    தென்னாப்பிரிக்காவில் புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் போட்ஸ்வானா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பரவி வருகிறது.

    Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா? Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?

    இதனால் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகள் சோதனைக்குள்படுத்தப்பட்ட பின்னரே மற்ற நாடுகளுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுகிறது. பல நாடுகள் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஓமிக்ரான் பரவிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளன.

    ஓமிக்ரான் கொடியது

    ஓமிக்ரான் கொடியது

    இதற்கு காரணம் இந்த ஓமிக்ரான் மிகவும் கொடியதாகும். இது 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஓமிக்ரான் வைரஸின் உருமாற்றமடைந்த புகைப்படத்தை ரோம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற பாம்பினோ கெசு மருத்துவமனையைச் சேர்ந்த இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார்கள்.

    ஓமிக்ரான் மாறுபாடு

    ஓமிக்ரான் மாறுபாடு

    இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ஓமிக்ரான் மாறுபாட்டில் டெல்டா மாறுபாட்டை விட பல பிறழ்வுகள் இருப்பதை நாம் தெளிவாகக் காணலாம். எல்லாவற்றிற்கும் மேலாக மனித உயிரணுக்களுடன் தொடர்பு கொள்ளும் புரதம் இந்த ஓமிக்ரானில் ஒரு பகுதியில் குவிந்துள்ளது. இந்த மாறுபாடுகள் மிகவும் ஆபத்தானவை என இப்போது சொல்லிவிட முடியாது.

    புகைப்படம்

    புகைப்படம்

    அது போல் இதன் பாதிப்பு தன்மையும் ஆய்வுகளுக்கு பிறகே தெரியவரும். இந்த புகைப்படம் போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் ஆகிய இடஙகளில் பாதிக்கப்பட்ட நபர்களின் மாதிரிகளில் இருந்து எடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. அனைத்து மாறுபாடுகளையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த படம் உள்ளது.

    சோதனை

    சோதனை

    அது போல் இது தடுப்பூசிக்கு கட்டுப்படுமா என்பதையும் சோதனை மூலமே கண்டறிய முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3டி வடிவில் உருவாக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் டெல்டா வேரியண்டை விட ஓமிக்ரான் இரட்டிப்பு எண்ணிக்கை உருமாற்றமடைந்துள்ளது. டெல்டா வேரியண்ட் 8 முறை உருமாற்றமடைந்துள்ள நிலையில் ஓமிக்ரானோ 34 முறை உருமாற்றம் அடைந்துள்ளது. அதாவது 70 சதவீத்திற்கு மேல் உருமாறியுள்ளது.

    English summary
    First photo of Omicron Covid 19 released shows there are many mutations happened than Delta.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X