டெல்லி அரியணையில் அமரும் ரேகா குப்தா.. முதல்முறை எம்எல்ஏ டூ முதலமைச்சர்.. தேர்வானது எப்படி?
டெல்லி: டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லி சட்டசபைக்கு முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா, நாளை நடக்கவுள்ள பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். டெல்லி மக்களின் பிரச்சனைகள் குறித்த புரிதல் மற்றும் ஆர்எஸ்எஸ் உடனான தொடர்பு ரேகா குப்தா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட காரணமாக பார்க்கப்படுகிறது.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிபெற்று 27 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்துள்ளது. பிப்.8ஆம் தேதியே முடிவுகள் தெரிய வந்தாலும், டெல்லி முதலமைச்சர் யார் என்ற கேள்வி மக்களிடையே இருந்து வந்தது. இதனிடையே டெல்லி முதலமைச்சர்களுக்கான ரேஸில் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் வர்மா, ரேகா குப்தா மற்றும் விஜயேந்தர் குப்தா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. பாஜக பார்வையாளர்களாக ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் தன்கர் ஆகியோரின் முன்னிலையில் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி சட்டசபைக்கு முதல்முறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர் ரேகா குப்தா.
இவர் டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். ஹரியானாவைச் சேர்ந்த பெண்ணான, ரேகா குப்தா, டெல்லி பல்கலைக்கழகத் தேர்தலில் போட்டியிட்டவர். அதேபோல் 3 முறை கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், தெற்கு டெல்லியின் மேயராகவும் இருந்தவர். அதுமட்டுமல்லாமல் பாஜக மகளிரணியின் துணைத் தலைவராகவும், தெற்கு டெல்லியின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்.
இவர் டெல்லியின் 9வது முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பாகவும் ஷீலா தீக்சித், ஆம் ஆத்மியின் அதிஷி ஆகியோர் பெண் முதலமைச்சர்களாக இருந்துள்ளனர். அந்த வகையில் பாஜக தரப்பிலும் பெண் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். டெல்லி மக்களின் பிரச்சனைகள் குறித்து நன்கு அறிந்தது மற்றும் ஆர்எஸ்எஸ் உடனான தொடர்பு ஆகியவை ரேகா குப்தா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை பதவியேற்பு விழா நடக்கவுள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை மதியம் பாஜக அரசு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் பதவியேற்கும் போது அவருடன் 6 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications