5 மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வி- டெல்லியில் காங். அதிருப்தி தலைவர்கள் இன்று ஆலோசனை
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து இன்று காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியல் நடைபெற உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து 5 மாநில கட்சி தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஜி-23 எனப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள மூத்த தலைவர் கபில்சிபல் இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், காங்கிரஸ் கட்சியில் அத்தனை முடிவுகளையும் ராகுல்காந்திதான் எடுக்கிறார். பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக சரண்ஜித்சிங் சன்னியை ராகுல் காந்திதானே அறிவித்தார். அப்படியான அறிவிப்பை வெளியிட ராகுல் என்ன கட்சித் தலைவரா? அப்படி ஒன்றும் இல்லை. ஆனால் ராகுல் காந்தியே முடிவுகளை எடுக்கிறார். அதனால் ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என சொல்வதில் அர்த்தம் எதுவும் இல்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை காங்கிரஸ் குரலாக இருப்பேன் என கூறியிருந்தார்.
Recommended Video
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications