இந்திரா காந்தி ஆட்சியையே வீழ்த்திய எதிர்க்கட்சிகள் ஒற்றுமை.. இதுதான் ஜனநாயகத்தின் பலம்! பிளாஷ் பேக்
டெல்லி: சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக அவசரநிலை பிரகடனம் செய்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு சர்வாதிகாரியாக செயல்பட்டவர் 1975-ல் இருந்த பிரதமர் இந்திரா காந்தி அம்மையார். இந்திராவின் இந்த ஆட்டத்தை 2 ஆண்டுகளிலேயே முடிவுக்கு கொண்டு வந்து அவரையும் தேர்தலில் படுதோல்வி அடைய செய்தது காங்கிரஸின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பதும் சரித்திரம்தான்.
நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு மறைந்த 1964-ம் ஆண்டு நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது பலரும் காமராஜர் அல்லது இந்திரா காந்தியை எதிர்பார்த்தனர். ஆனால் காமராஜரோ லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கினார். காலம் அவரை விரைவாக அழைத்துக் கொள்ள மீண்டும் புதிய பிரதமர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை வந்தது.

அப்போதும் காமராஜர் தமக்கு அந்த பதவியை எடுத்துக் கொள்ளாமல் நேருவின் மகள் இந்திரா அம்மையாரை பிரதமர் பதவி எனும் அரியணையில் அமர்த்தினார். அப்போது காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்திக்கு சவால்விடுக்கக் கூடிய ஏராளமான சீனியர்கள் இருந்தனர். இத்தனை சீனியர்களையும் ஒருசேர தன்வழிக்கு கொண்டு வந்து தமது அரசியல் இருப்பை அசைக்க முடியாதவராக்கிக் கொள்ள இந்திரா அதிதீவிரம் காட்டினார். இதனால் காங்கிரஸ் பேரியக்கம் இரண்டாக பிளவுபட்டது. இந்திராவை பிரதமராக்கிய காமராஜரே அவருக்கு எதிராக நின்றார். ஆனாலும் இந்திரா அம்மையார் தளரவும் இல்லை... இந்திரா அம்மையாரை சுற்றிய சூறாவளிகள் ஓயவும் இல்லை.
1970களின் தொடக்கம் முதலே இந்திரா காந்தி நாடு தழுவிய நிலையில் பல எதிர்ப்புகளை எதிர்கொண்டு வந்தார். 1971 லோக்சபா தேர்தலில் இந்திரா காந்தி தமது ரேபரேலி தொகுதியில் வெல்வதற்கே பெரும் போராட்டமாக இருந்தது. அப்படியும் வென்ற இந்திராவின் வெற்றியை நீதிமன்றப் படிகளேறி கேள்விக்குள்ளாக்கி கொண்டிருந்தார் ராஜ்நாராயணன் எனும் முதுபெரும் தலைவர். இன்னொரு பக்கம் சோசலிஸ்ட் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் பீகார் இயக்கம், இந்திரா காந்தியின் அரசியலுக்கு எதிராக பெரும் கலகத்தை கிளப்பிக் கொண்டிருந்தது. இப்பின்னணியில் 1971-ல் இந்திரா காந்தி தேர்தலில் வென்றது செல்லாது என அலகாபாத் நீதிமன்றம் 1975-ல் தீர்ப்பளிக்க இந்தியாவின் சரித்திரம் மாறியது.
இந்திராவை வீழ்த்திய எதிர்க்கட்சிகள்: 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி இந்தியாவில் அவசரநிலையை இந்திரா காந்தி பிரகடனம் செய்தார். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் அடக்கி ஒடுக்கிவிட எமர்ஜென்சி எனும் அந்த அவசரநிலை காலத்தை முழுவீச்சாக பயன்படுத்தினார். அப்போது அவரது இளையமகன் சஞ்சய் தளபதி சர்வாதிகார போர்படை தளபதியாக இந்திராவுக்கு இருந்தார். அடக்குமுறைகளை எதிர்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சும்மா இருக்கவில்லை.
ஒற்றுமையே பலம்: இந்திராவின் இந்த அடக்குமுறைகளை நாடு தழுவிய அளவில் சிதறிக்கிடந்த அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்தது. இத்தனைக்கும் அனைத்து அரசியல் தலைவர்களது சித்தாந்தங்களும் பரம எதிரிகளாக இருந்தன. ஆனால் அத்தனை மாச்சரியங்களையும் தூக்கி எறிந்துவிட்டு இந்திராவை எதிர்க்க ஓரணியில் திரண்டன எதிர்க்கட்சிகள். அப்போது உதயமானதுதான் ஜனதா கட்சி. ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஒருங்கிணைப்பில் உருவான ஜனதா கட்சி சோசலிஸ்ட் கட்சி, காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ், இன்றைய பாஜகவின் தாய் அமைப்பான பாரதிய ஜனதா சங், பாரதிய லோக் தள், ஸ்வதந்திரா கட்சி, உட்கல் காங்கிரஸ், பிரஜா சோசலிஸ்ட் கட்சி, சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி என அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு 1977-ம் ஆண்டு ஜனவரி 23-ல் ஜனதா கட்சி உருவானது.
காங்கிரஸ் இல்லாத ஆட்சி: அப்போது நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவியது. ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி அம்மையார் வீழ்த்தப்பட்டார். நாட்டில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் அரசாங்கம் அமைந்தது. அப்போதைய தேர்தலில் நாடு முழுவதும் 298 இடங்களில் ஜனதா கூட்டணி வென்றது. இது இந்தியாவின் சரித்திரத்தை மாற்றும் என நம்பப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலத்தின் துயரத்தில் அதிகார போட்டிகளில் ஜனதா அரசாங்கம் 2 ஆண்டுகளில் கவிழ்ந்து நெல்லிக்காய் போல இந்த கூட்டணி சிதறியது. இதன் பிந்தைய பொதுத்தேர்தலில் மீண்டும் வென்றார் இந்திரா.
இருப்பினும் ஆட்சி மாற்றம் தன்னிலை உணர வைத்தது. அதிகார போதை இறங்கியது. இதன் விளைவாக தமது அதிகார ஆணவ அடக்குமுறைகளை ஏவிவிட்ட கொடுஞ்செயலுக்கு தேசத்திடம் மன்னிப்பு கோரினார் இந்திரா காந்தி. அவர் மரணிக்கும் வரையில் அசைக்க முடியாத வல்லமை கொண்ட இரும்புப் பெண்மணியாகவே திகழ்ந்து மறைந்தார்!
மீண்டும் எதிர்க்கட்சிகள்: இன்று அதேபோல தேசம் தழுவிய அளவில் காங்கிரஸ், இடதுசாரிகள், திராவிட கட்சிகள், இன்றைய ஜனதா என அனைத்து முகாம்களின் கட்சிகளும் இப்போதும் ஓரணியில் ஒன்று திரண்டிருக்கின்றன. இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட இந்திரா காந்தியையே அசைத்து பார்த்தன எதிர்க்கட்சி ஒற்றுமை. எனவேதான் இப்போதும் பாஜகவை அசைக்க முடியும் என்று அவர்கள் ஆழமாக நம்புகிறார்கள். இந்த எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் என்னவாகும் என்பதை காலம் பதில் சொல்லும்!
-
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி












Click it and Unblock the Notifications