Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜன்னல் சீட்டுக்கு இனி கூடுதல் கட்டணம் இல்லை.. விமானங்களில் 60% இருக்கையை ‘ப்ரீ’யாக தேர்வு செய்யலாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விமானங்களில் மறைமுக கட்டணங்களை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு விமான போக்குவரத்து அமைச்சகம் இன்று முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி விமானங்களில் 60% இருக்கைகளை பயணிகள் கட்டணமின்றி தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் விமானங்களில் ஜன்னலோர இருக்கைகள், முன்பக்க இருக்கைகள் தனி கட்டணம் வசூலிப்பதில் கட்டுப்பாடு விழுந்துள்ளது.

Photo Credit:

ஈரான் போர் காரணமாக தற்போது பல்வேறு விமானங்களில் டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளுக்கான விமான போக்குவரத்து பாதிப்பால் இந்த கட்டண உயர்வு நடைமுறையில் உள்ளது.

இப்படியான சூழலில் தான் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இன்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன்படி விமானங்களில் பயணிக்கும் பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் மறைமுக கட்டணங்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது விமான பயணங்களின்போது பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக ஜன்னலோர இருக்கை, முன்பக்க இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது விமான பயணிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தான் விமானத்தில் உள்ள இருக்கைகளில் 60 சதவீத இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதேபோல் இன்னும் சில முக்கிய விதிமுறைகளை பின்பற்ற விமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரே எண்ணில் பதிவு செய்யும் பயணிகளுக்கு அடுத்தடுத்த இருக்கைகளை ஒதுக்க வேண்டும். விமானங்களில் பயணிகளின் உடைமைகளை எடுத்து செல்வது, செல்ல பிராணிகளை கொண்டு செல்வது, இசை கருவிகள், விளையாட்டு உபகரணங்களை எடுத்து செல்வது தொடர்பான விதிகளை தெளிவாக வழங்க வேண்டும். விமான பயணம் தொடர்பான விவரங்களை ஒவ்வொரு பயணிக்கும் அவர்களது தாய் மொழியில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+