புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்கு ரூ.50,000 கோடியில் திட்டம்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லி: பிரதமரின் கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் திட்டம் குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து வருகிறார். 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, திட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களை ஈடுபட வைக்க உள்ளதாக அவர் உறுதியளித்தார்.
பிரதமரின் கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் திட்டத்தின் துவக்கமாக இந்த செய்தியாளர் சந்திப்பு, அமைந்திருந்தது. இடம் பெயர் தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பொதுப் பணித்துறை மூலமாக வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய திட்டம் இதுவாகும்.

ஜூன் மாதம் 20ஆம் தேதி பீகாரில் முறைப்படி பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார். இது தொடர்பான விளக்கத்தை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க அறிவுறுத்தியுள்ளோம். ஜல்ஜீவன், வீடுகட்டும் திட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். பொருளாதார இழப்பை சரிகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களுக்கு பெருமளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். அவர்களின் திறன் சார்ந்த பணிகளை மத்திய, மாநில அரசுகள் மிக நுணுக்கமாக தயாரித்துள்ளன. கரீப் கல்யான் ரோஜ்கார் அபியான் திட்டத்தின்கீழ், 25 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications