சாமியார்களின் சர்ச்சை பேச்சு.. நாட்டுக்கே ஆபத்து..பிரதமர் மோடிக்கு, முன்னாள் ராணுவ தளபதிகள் கடிதம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இந்து சாமியார்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சாமியார்கள் சிலர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதால் சர்ச்சை எழுந்தது.

இந்து ரக்சா சேனா அமைப்பின் தலைவர் பிரபோதானந்த் கிரி, பாஜக தலைவர்கள் அஸ்வினி உபாத்யாய், உதிதா தியாகி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சர்ச்சை கருத்துகள்

சர்ச்சை கருத்துகள்

''இந்து மதம் அழிகிறது. அண்டை நாடுகளில் இந்துக்கள் விரட்டப்படுகிறார்கள். நம்முடைய நாட்டிலும் இந்துக்களுக்கு இதே நிலைதான். நாம் இப்போதே ஆயுதம் தூக்க வேண்டும். நாம்தான் தாக்க வேண்டும். கொல்ல வேண்டும். இல்லையென்றால் நாம் கொல்லப்படுவோம் என்று இந்த கூட்டத்தில் பங்கேற்ற இந்து சாமியார்கள் மத வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்கள். இதேபோல் டெல்லியில் நடந்த இந்து சாமியார்கள் மாநாட்டிலும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து கூறியதாக புகார் எழுந்தது.

76 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம்

76 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம்

ஆனால் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது போலீசார் பெயரளவுக்கு மட்டுமே நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்து சாமியார்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக நீதித்துறை உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவுக்கு, உச்ச நீதிமன்றத்தின் 76 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம் ஒன்றை ஏற்கனவே அனுப்பினார்கள்.

 பிரதமருக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதம்

பிரதமருக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதம்

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தும்படியும் 5 முன்னாள் ராணுவ அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆயுதப் படைகளின் ஐந்து முன்னாள் தலைமைத் தளபதிகள் மற்றும் வீரர்கள், அதிகாரிகள் எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

ஏற்றுக்கொள்ள முடியாதது

ஏற்றுக்கொள்ள முடியாதது

நாட்டிற்குள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீறுவது விரோதமான வெளிப்புற சக்திகளை ஊக்குவிக்கும். மத்திய ஆயுதப்படைகள் (CAPFs) மற்றும் போலீஸ் படைகள் உட்பட சீருடையில் இருக்கும் நமது ஆண்கள் மற்றும் பெண்களின் ஒற்றுமை இதுபோன்ற பேச்சுகள் மூலம் சீர்குலைக்கப்படும். வெறுப்பின் பொது வெளிப்பாடுகளுடன் வன்முறையைத் தூண்டுவதை நாம் அனுமதிக்க முடியாது - இது உள்நாட்டுப் பாதுகாப்பின் கடுமையான மீறல்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், நமது தேசத்தின் சமூகக் கட்டமைப்பைக் கிழித்துவிடும்.ஆயுதங்களை ஏந்த செய்வது நமது சொந்த குடிமக்களின் இனப்படுகொலையில் இராணுவத்தை பங்கு கொள்ளுமாறு கேட்பதற்கு சமம், இது கண்டிக்கத்தக்கது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதத்தில் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+