பல பாகிஸ்தான்களை உருவாக்க பாஜக விரும்புகிறது.. எதற்காக “தி காஷ்மீர் பைல்ஸ்”.. மெகபூபா முப்தி காட்டம்
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பதிலாக கடந்த எட்டு ஆண்டுகளில் காஷ்மீரி பண்டிட்டுகளுக்காக அவர்கள் ஏதாவது செய்திருந்தால், இன்று அவர்களின் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும் எனவும், பல பாகிஸ்தான்களை உருவாக்க பாஜக விரும்புகிறது என காஷ்மீர் முன்னாள் முதல்வரான மெகபூபா முப்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
1980களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் வெளியாகியுள்ளது.

தி காஷ்மீர் பைல்ஸ்
காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். ‘தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தை இழிவுபடுத்த சதி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டிய நிலையில், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இந்துத்வா அமைப்புகள் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பல மாநிலங்களில் வரிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகள் கேள்வி
ஜம்மு மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா , சந்திர சேகரராவ், காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தைப் பற்றி தவறாக பேசுபவர்களை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். "பேச்சு சுதந்திரத்தின் கொடி ஏந்தியவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், கடந்த 5-6 நாட்களாக கடும் கோபத்தில் உள்ளனர். உண்மைகளின் அடிப்படையில் படத்தைப் புகழ்வதற்குப் பதிலாக, அவர்கள் காஷ்மீர் பைல்ஸ் படத்தை இழிவுபடுத்துகிறார்கள், "என்று பிரதமர் கூறினார்.

மெகபூபா முப்தி காட்டம்
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பதிலாக கடந்த எட்டு ஆண்டுகளில் காஷ்மீரி பண்டிட்டுகளுக்காக அவர்கள் ஏதாவது செய்திருந்தால், இன்று அவர்களின் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும் எனவும், பல பாகிஸ்தான்களை உருவாக்க பாஜக விரும்புகிறது என காஷ்மீர் முன்னாள் முதல்வரான மெகபூபா முப்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி, "தேசத்தைப் பிளவுபடுத்த" மற்றும் "பல பாகிஸ்தானை உருவாக்க" பாஜக விரும்புகிறது என்று குற்றம் சாட்டியதோடு, காங்கிரஸ் ஆட்சியின் போது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருந்ததாகக் கூறினார்.
Recommended Video

ஆவேசமாக கேள்வி
மேலும், எனது தந்தையின் மாமாக்கள் மற்றும் உறவினர்கள் கொல்லப்பட்டனர், நாங்கள் வன்முறையை நிறுத்த வேண்டும், பாஜக பாகிஸ்தானுடனான சண்டைக்கு பதில் உள்ளூர் மக்கள் வெல்ல விரும்புகிறார்கள் என்றார். மேலும் பாஜக அவர்கள் இந்து-முஸ்லிம், ஜின்னா, பாபர், ஔரங்கசீப் பற்றியே இப்போதும் பேசுகிறார்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு அவுரங்கசீப் இருந்தார். பாபர் 800 ஆண்டுகளுக்கு முன்பு, இப்போது பாபர்-அவுரங்கசீப்பின் சம்பந்தம் என்ன? சாலைகள், நீர்ப்பாசனம், வேலையின்மை போன்ற பிரச்சினைகள் இல்லையா? என்றும் மெகபூபா ஆவேசமாக கேள்வியெழுப்பினார்.












Click it and Unblock the Notifications