4 நாட்களாக நகராமல் தவிக்கும் வாகன ஓட்டிகள்! டெல்லி - கொல்கத்தா ஹைவேயில் கடும் போக்குவரத்து நெரிசல்
டெல்லி: டெல்லி - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 4 நாட்களாக இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 30 மணி நேரத்தில் வெறும் 7 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பயணம் செய்துள்ளோம் என்று லாரி ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
டெல்லி, பீகார், கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில், கடந்த வெள்ளிக்கிழமை பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, தேசிய நெடுஞ்சாலை 19-ல் ஆறு வழிச்சாலை அமைக்கும் நிறுவனம் உருவாக்கிய பல மாற்றுப் பாதைகளும், சர்வீஸ் சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கின.

4 நாட்களாக போக்குவரத்து நெரிசல்
இதனால் சாலைகளில் ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் உருவாகி, நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இது போக்குவரத்து நெரிசலை மேலும் மோசமாக்கியது. சில கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கவே பல மணிநேரம் ஆகிறது. ரோஹ்தாஸ் நகரிலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள அவுரங்காபாத் வரையிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண, உள்ளூர் நிர்வாகம் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வெளியூர்களிலிருந்து கனரக வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. 4 நாட்களாக போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
லாரி ஓட்டுநர் வேதனை
தேசிய நெடுஞ்சாலை ஆணையமோ (NHAI) அல்லது சாலை அமைக்கும் நிறுவனமோ இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலைமை மிகவும் மோசமாகி, 24 மணி நேரத்தில் ஐந்து கிலோமீட்டர் தூரம் மட்டுமே வாகனங்கள் கடக்க முடிகிறது என்று வாகன ஓட்டிகள் கூறினர். இது தொடர்பாக லாரி ஓட்டுநர் பிரவீன் சிங் கூறுகையில், "கடந்த 30 மணி நேரத்தில் வெறும் 7 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பயணம் செய்துள்ளோம்.
சுங்கக் கட்டணம், சாலை வரி மற்றும் பிற செலவுகள் செய்தாலும், பல மணிநேர போக்குவரத்து நெரிசலைச் சந்திக்கிறோம். தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர்களோ அல்லது உள்ளூர் நிர்வாகமோ சாலையில் எங்குமே இல்லை" என்றார். மற்றொரு லாரி ஓட்டுநர் சஞ்சய் சிங் கூறும் போது, "கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளோம். பசியுடனும் தாகத்துடனும் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளோம். சில கிலோமீட்டர்கள் கடக்கவே பல மணிநேரம் ஆகிறது" என்று தெரிவித்தார்.
எளிதில் கெட்டுப்போகும் பொருட்கள்
கொல்கத்தா - டெல்லி தேசிய நெடுஞ்சாலை என்பது நாட்டின் மிக முக்கியமான ஹைவே ஆகும். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகள் இந்த சாலையை பயன்படுத்தியே செல்கின்றன. இதனால், 4 நாட்களாக காணப்படும் இந்த போக்குவரத்து நெரிசல் வணிகத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.
எளிதில் கெட்டுப்போகும் பொருட்களை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்கள், தாங்கள் கொண்டு செல்லும் சரக்குகள் இழப்புக்கு உள்ளாகும் என்று அச்சமடைந்துள்ளனர். பாதசாரிகள், ஆம்புலன்ஸ்கள், அவசரகால சேவைகள் மற்றும் சுற்றுலா வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications