இலங்கை ஜனாதிபதி அனுரவுக்கு 'தமிழில்' வாழ்த்து சொல்லி சம்பவம் செய்த அதிபர் யார் தெரியுமா?
டெல்லி: இலங்கை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜேவிபி எனும் சிங்களப் பேரினவாத, இடதுசாரி தலைவரான அனுர குமார திசநாயக்கவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். இதில் 'தமிழில்' வாழ்த்து தெரிவித்து அனைத்து நாட்டு தலைவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான். பிரான்ஸ் அதிபர் வெளியிட்ட தமிழ் வாழ்த்துச் செய்தியை ஈழத் தமிழர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள். வட இந்தியாவில் இருந்து சென்று குடியேறியவர்கள் சிங்களர். ஆங்கிலேயர் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கும் போது சிங்களர் கை ஓங்கியது. இதனால் பூர்வகுடி தமிழ் மக்கள் இன ஒடுக்குமுறைகளுக்கும் இனப்படுகொலைகளுக்கும் உள்ளாகினர். இதனால் பூர்வகுடி தமிழர்கள் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தினர். இந்த ஆயுதப் போராட்டத்தால் பல லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் உலகின் பல நாடுகளில் அரசியல் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். ஈழத் தமிழர்கள் இன்னமும் இலங்கையில் அரசியல் உரிமைகளுக்காக ஜனநாயக வழியிலான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சிங்களப் பேரினவாத மற்றும் இடதுசாரி இயக்கமான ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றார். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமது நிஜ முகத்தைக் காட்டாமல் இலங்கையின் பொருளாதாரம் உள்ளிட்ட அம்சங்களை மட்டும் பேசி வாக்குகளை அறுவடை செய்த அனுர குமார திசநாயக்க, இலங்கை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துகள்: இலங்கையின் 9-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அனுர குமார திசநாயக்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அனைவருக்கும் தமது சமூக வலைதளப் பக்கத்தில் நன்றி தெரிவித்து வருகிறார் அனுர குமார திசநாயக்க.

தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர்: இந்த வரிசையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஆனால் உலக நாடுகளின் தலைவர்களைப் போல அல்லாமல், தமிழ் மொழியில் அனுர குமார திசநாயக்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் இம்மானுவேல் மேக்ரான். பிரான்ஸில் பெரும் எண்ணிக்கையிலான ஈழத் தமிழர்கள் அரசியல் அகதிகளாக தஞ்சமடைந்து குடியுரிமை பெற்று வாழ்கின்றனர். ஈழத் தமிழரின் போராட்டங்களுக்கு உறுதுணையாகவும் பின்புலமாகவும் பிரான்ஸ் இருந்து வருகிறது. இந்த பின்னணியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்திருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வாழ்த்து செய்தி என்ன?: பிரான்ஸ் அதிபர் இம்மான்வேல் மேக்ரான் தமது வாழ்த்துச் செய்தியில், அன்புள்ள இலங்கை நண்பர்களே, உங்கள் ஜனாதிபதி தேர்தல் சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள். இந்த தேர்தல், இலங்கையின் ஜனநாயகத்தின் வீரியத்தை பறைசாற்றுகின்றது.அனுரா திசாநாயக்க, உங்கள் வெற்றிக்கு எம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்! இலங்கையுடன் இணைந்து செயல்படுவதற்கு பிரான்ஸ் தயாராக உள்ளது. நம்பிக்கையும், ஒத்துழைப்பும் நம் கூட்டுமுயற்சிகளுக்கு அடிக்கல்லாக அமையட்டும் என தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழருக்கு ஆதரவு: உலக நாடுகளிலேயே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மட்டுமே அனுர குமார திசநாயக்கவுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக ஈழத் தமிழர் பக்கமே பிரான்ஸ் நிற்கிறது என்பதை பகிரங்கமாகவும் அறிவித்திருக்கிறார் இம்மானுவேல் மேக்ரான். இதனால் அவரது ஃபேஸ்புக் பதிவை ஈழத் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications