Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளி - கல்லூரியில் டாப் மாணவி.. ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் தளபதியானது எப்படி? பெண் டாக்டரின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி கார் வெடிப்பில் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அடுத்தடுத்து டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த டாக்டர் ஷாகின் ஷாகித் என்ற பெண்ணை ஃபரிதாபாத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஜெய்ஷ் இ முகமது எனும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் மகளிர் பிரிவுக்கான இந்தியாவின் தலைவராக செயல்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர் பள்ளி, கல்லூரி படிப்பை டாப்பராக இருந்துள்ளதோடு, உத்தர பிரதேச அரசு தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணி செய்து வந்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி கார் வெடிப்பில் ஹரியானா மாநிலம் ஃபரிடாபாத்தை சேர்ந்த பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் கார் வெடித்தது. அந்த காரை ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த உமர் ஓட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. கார் வெடித்ததில் 13 பேர் பலியான நிலையில் உமரும் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

from-topper-student-to-terrorist-what-happened-in-doctor-shaheen-shahid-life-details-here

இந்த உமர் டாக்டர் ஆவார். ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். இந்த பல்கலைழக்கத்தில் பணியாற்றி வரும் டாக்டர்கள் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அடில் ரதார் என்ற டாக்டர் கட்டுப்பாட்டில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அடில் ரதாரை ஜம்மு காஷ்மீர் போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் ஃபரிடாபாத்தில் செயல்பட்டு வரும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அல் ஃபலா பல்கலைகழகத்தில் பணியாற்றிய முஜாமில் ஷகீல் கைது செய்யப்பட்டார். உமரும் அதே பல்கலைக்கழத்தில் பணியாற்றிய நிலையில் போலீசுக்கு பயந்து அவர் டெல்லியில் தாக்குதல் நடத்தி உயிரை விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ‛ஒயிட்காலர்' பயங்கரவாத குழுவாக செயல்பட்டு உள்ளனர். பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

கைதான டாக்டர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் நேற்று இந்த ‛ஒயிட்காலர்' பயங்கரவாத குழுவை சேர்ந்த ஷாகின் ஷாஹித் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 46. மேலும் ஷாகின் ஷாகித் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மகளிர் பிரிவுக்கான இந்திய தலைவராக இருந்துள்ளார். இவர் ஜமாத் உல் மொமினின் என்ற பெயரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் மகளிர் பிரிவை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனராக இருக்கும் மசூத் அசாரின் சகோதரி சாதியா அசாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. சாதியா அசார் இந்த பயங்கரவாத அமைப்பின் பாகிஸ்தான் மகளிர் பிரிவு தலைவியாக உள்ள நிலையில் ஷாகின் ஷாகித் இந்திய தலைவராக செயல்பட்டு வந்துள்ளார்.

ஷாகித் ஷாகித் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். உத்தர பிரதேச மாநிலம் காந்தாரி பஜாரில் உள்ள லால்பாக்கில் வீட்டில் வசித்து வந்தார். இவர் சிறுவயது முதலே நன்கு படித்து வந்துள்ளார். ‛டாப்பராக' இருந்துள்ளார். இதனால் எம்பிபிஎஸ் மற்றும் எம்டி படிப்பை பிரக்யாராஜில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் படித்தார். இவர் உத்தர பிரதேச மாநில அரசின் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

இதையடுத்து கான்பூரில் உள்ள ஜிஎஸ்விஎம் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்தார். மருந்தியல் (pharmacology) துறையில் பணியாற்றினார். பிறகு 2009ம் ஆண்டில் 6 மாதம் அவர் கனுஜ் மருத்துவ கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பிறகு 2010ல் மீண்டும் கான்பூர் கல்லூரிக்கு வந்தார். 2013ம் ஆண்டில் அவர் திடீரென்று மாயமானார். கல்லூரி செல்லவில்லை. பலமுறை அவரை தொடர்பு கொள்ள முயன்றபோதும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இறுதியாக அவர் 2021ம் ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அதன்பிறகு ஹரியானாவின் அல் ஃபலா பல்கலைக்கழத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு தான் அவர் முஜாமில் அகமதுவை சந்தித்தார். அதன்பிறகு அவர்கள் 2 பேரும் நெருக்கமாக செயல்பட தொடங்கி உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாகின் ஷாகித்துக்கு திருமணம்முடிந்தது. இவரது கணவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். அவர் கண்மருத்துவர் (Ophthalmologist).

கடந்த 2015ம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். அதன்பிறகு டாக்டர் முஜாமில் உடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஃபரிதாபாத்துக்கு சென்று அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முஜாமில்து, ஷாகின் ஷாஹித்தின் காரை பயன்படுத்தி வந்துள்ளார். அந்த காரில் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஷாகின் ஷாகித் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷாகின் ஷாகித் பற்றி அவருடன் பணியாற்றியவர் கூறுகையில, ‛‛ஷாகித் ஷாகித் தனது கணவரை 2015ல் விவாகரத்து செய்தார். அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை'' என்று கூறினார். இதற்கிடையே தான் ஷாகித் ஷாகித் கைது செய்யப்பட்ட நிலையில் சகோதரர் டாக்டர் பர்வேஸ் அன்சாரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+