ஜி20 உச்சி மாநாடு: ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் மல்லிகார்ஜூன கார்கே புறக்கணிப்பு.. சீறிய ராகுல்!
டெல்லி: ஜி20 உச்சி மாநாட்டையொட்டி இன்று இரவு ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திற்கு காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடக்கிறது. இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் இந்த மாநாடு தலைநகர் டெல்லியில் நடக்கிறது. கடந்த ஆண்டு இந்தோனேசியா தலைமை வகித்த நிலையில், நடப்பு ஆண்டில் ஜி 20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இதன் காரணமாக உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லிக்கு வர தொடங்கியிள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாது பிரதமர் ரிஷி சுனக், சிங்கப்பூர் பிரதமர், இந்தோனேசிய அதிபர், கனடா பிரதமர் உள்ளிட்டோர் நேற்றே டெல்லி வந்தடைந்தனர். உலக தலைவர்களின் வருகையையொட்டி, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட ஜி20 தலைவர்கள், பிரதிநிதிகள் தங்குவதற்கு டெல்லியில் உள்ள சொகுசு ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கவும், இந்தியாவின் செழுமைமிக்க கலாசாரத்தை அவர்களுக்கு காட்டவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று இரவு ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரவு உணவு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில், பங்கேற்க மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஜனாதிபதி வழங்கும் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மல்லிகார்ஜூன கார்கேவை பொறுத்தவரை எதிர்க்கட்சி தலைவர் என்பதால் அவருக்கு கேபினட் அந்தஸ்து உண்டு. அப்படி இருந்த போதிலும் அவருக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படவில்லை.
எதிர்க்கட்சிகள் யாருக்கும் அழைப்பு உடைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அமைச்சர்கள் மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுல்லப்படாதட்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
எனினும் பெல்ஜியம் சென்றுள்ள ராகுல் காந்தியிடம் இது குறித்து கேட்டனர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, எதிர்க்கட்சி தலைவரை அழைக்கக் கூடாது என அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். இந்திய மக்கள் தொகையில் 60 சதவிகித மக்களின் தலைவரை அவர்கள் மதிக்கவில்லை. இது மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications