கல்வான் மோதல்.. பண்றதையும் பண்ணிட்டு பழி போட்ட சீனா.. "நீங்கதான் காரணம்.." இந்தியா திட்டவட்ட பதிலடி
டெல்லி: சீனாவின் நிலப்பரப்பில் இந்தியப் படைகள் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்ததால், கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு கோடு அருகே கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் சம்பவம் நடந்தது என்ற சீனா குற்றம்சாட்டியதை, இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது.
இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து எல்லை பிரச்சினை தீர்க்க பணியாற்ற வேண்டும் என்று சீனாவுக்கு, இந்தியா அறிவுரை தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக்கின் பல பகுதிகளில் கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டது. இதை இந்திய வீரர்கள் தடுத்தனர். எனவே இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கல்வான் மோதல்
இந்தநிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர். அப்போது இருநாட்டு வீரர்களுக்கு இடையே பயங்கர மோதலும், வன்முறையும் ஏற்பட்டது.
இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.

பதற்றம் நீடிப்பு
சீனா தரப்பிலும் அதிக உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஆனால் இதை அந்த நாடு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மோதலுக்குப்பின் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இரு தரப்பும் படைகளைக் குவித்துள்ளன. இதனால் பதற்றம் நீடித்து வருகிறது.
Recommended Video

படைகள் விலகல்
இந்த பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்தவும் இரு தரப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் பலனாக பங்கோங் சோ ஏரி, கோக்ரா போன்ற இடங்களில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்கிக்கொண்டன. எனவே, லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் எஞ்சியுள்ள பிரச்சினைகளை தீர்க்கவும் இரு தரப்பும் முடிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

சீனா குற்றச்சாட்டு
இதற்கிடையே, லடாக்கில் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்துக்கு இந்தியாதான் காரணம் என சீனா தெரிவித்துள்ளது. எல்லை தொடர்பாக போடப்பட்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் இந்தியா மீறியதுடன், சீனாவின் பகுதிக்குள் எல்லை தாண்டி நுழைந்ததே இந்த மோதலுக்கு காரணம் என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியிருந்தார்.

இந்தியா பதிலடி
சீனாவின் இந்தக் குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக நிராகரித்து, மத்திய வெளியுறவுத் துறை பதிலடி கொடுத்து இருக்கிறது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வான் மோதல் தொடர்பான சீனாவின் கருத்துகளை நிராகரிக்கிறோம். கிழக்கு லடாக்கில் அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் கடந்த ஆண்டு நடந்த மோதல் விவகாரத்தில் எங்கள் நிலை தெளிவாகவும், நிலையாகவும் உள்ளது. சீனாவின் ஆத்திரமூட்டும் நடத்தை மற்றும் எல்லையின் இயல்பு நிலையை தன்னிச்சையாக மாற்றும் முயற்சிகளே கல்வான் மோதலுக்கு காரணம் ஆகும்.

பேச்சுவார்த்தையை பாருங்கள்
இது இருநாட்டு பரஸ்பர உறவுகளிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்தது போல, எல்லை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து, கிழக்கு லடாக்கின் அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மீதமுள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க சீனா நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம். இவ்வாறு இந்தியா தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications