மும்பையை பார்த்தீங்களா.. Gen Z சப்போர்ட் எங்களுக்குதான்! அடித்து சொல்லும் பிரதமர் மோடி
டெல்லி: மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, மும்பை மாநகராட்சியை பாஜக கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறது. இது குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, Gen Z சப்போர்ட் எங்களுக்குதான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவின் இளம் தலைமுறையினர் (Gen Z) பாஜகவின் வளர்ச்சிப் பாதையில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்" எனக் குறிப்பிட்டார். சமீபத்தில் மும்பையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக பெற்ற பெரும் வெற்றியையும் அவர் உதாரணமாகக் காட்டினார்.

மால்டாவில் பேசிய பிரதமர், மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக முதல்முறையாக வரலாற்று வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டினார். மேற்கு வங்க வாக்காளர்களும் இந்த முறை பாஜகவை ஆதரிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் ஆளும் மம்தா பானர்ஜி அரசை கடுமையாக விமர்சித்த பிரதமர், பெங்காலி மொழியில், 'இந்த திரிணாமுல் அரசு மாற்றப்பட வேண்டும்' என முழங்கினார். திரிணாமுல் ஆட்சி மக்களின் பணத்தைச் சுரண்டி, மத்திய அரசின் உதவிகள் மக்களைச் சென்றடைவதைத் தடுப்பதாக மால்டா பேரணியில் அவர் குற்றம் சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் மேற்கு வங்கத்தில் வளர்ச்சி உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி, ஊடுருவல்காரர்களுக்கு திரிணாமுல் அடைக்கலம் தருவதாகக் குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்ததும், ஊடுருவல்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். குடியுரிமைத் திருத்தச் சட்டம் இருப்பதால், நாம் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
Reliance: 6ஆவது ஆண்டாக ஊதியமில்லாமல் வேலை செய்யும் முகேஷ் அம்பானி! ஏன் என்னாச்சு? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications