மாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பட்ஜெட் தாக்கலுக்கு பின் சம்பளம் சட்டென உயரலாம்
டெல்லி: 2024-25ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பபட உள்ளது. இந்த பட்ஜெட்டில் மாத சம்பளம் வாங்குவோருக்கான சிறப்பு சலுகைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
மாத சம்பளம் வாங்குவோர் பலர் எப்போது சம்பளம் அதிகமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். பலருக்கும் சம்பள உயர்வு என்பது அண்மைக்காலங்களில் கனவாகி வருகிறது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு காரணமாக வாங்கும் சம்பளமே போதவில்லை. மாதம் 5ம் தேதி பிறந்தால் இஎம்ஐ, 10ம் தேதி தாண்டினால் பணம் இல்லாத நிலையில் பலர் இருக்கிறார்கள்.

பலரது வாழ்க்கை கிரிடிட் கார்டு, இஎம்ஐயில் தான் ஓடுகிறது. மாத சம்பளத்தில் வீட்டு வாடகை, பள்ளி கட்டணம், கரெண்ட் பில், கார் இஎம்ஐ, வீட்டு கடன் இஎம்ஐ என்று எல்லாமே போவது ஒருபுறம் எனில் கணிசமாக வருமான வரியும் கட்டும் நிலை இருக்கிறது. 30000 முதல் 50000 வரை வருமான வரி கட்டும் நிலையில் நடுத்தர வர்க்கத்தினர் பலர் இருக்கிறார்கள். சிலர் ஒரு லட்சம் வரை வருமான வரி கட்டும் நிலை இருக்கிறது. இதன் காரணமாக மாதசம்பளத்தில் கணிசமாக இந்த தொகை காலியாகிவிடுகிறது.
வருமான வரி கட்டும் பலருக்கும் வருமான வரி குறித்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் 2024 பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி உச்ச வரம்பை மாற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் ஜூலை 23ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொதுவாக பட்ஜெட் என்பது ஒவ்வொரு நிதியாண்டு தொடங்கும் முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அப்போது பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளால் வருமான வரி உள்பட பல்வேறு வரி செலுத்துவோர் பயனடைவார்கள்.
பொதுத்தேர்தல் காரணமாக 2024ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் வரும் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அப்போது அரசு அறிவிக்கும் மாற்றங்கள் ஏப்ரல் 1, 2024-25 முதல் நடைமுறைக்கு வரும். அந்த வகையில் வருமான வரி விதிப்புகளை அரசு மாற்றினால் அடுத்த ஆண்டு பலன் கிடைக்கும்.
பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு, சம்பளம் பெறும் நபர்களின் மாதாந்திர வரி விலக்கு (டிடிஎஸ்) குறைக்கப்படலாம் என்றும் அத்துடன் பிடித்தம் போக அடிப்படை (Take Home) சம்பளம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசு வருமான வரியில் உச்சவரம்பை அதிகரித்தால் பலருக்கும் மாதம் மாதம் கிடைக்கும் சம்பளத்தில் கணிசமாக கைக்கு வர வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் பலருக்கு நன்மை அளிக்கும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன சர்ப்ரைஸ் வைத்துள்ளார் என்பதை அறிய இன்னும் சில நாட்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications