டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா அதிகரிப்பு ... நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் ரத்து... மத்திய அரசு அதிரடி!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நடைபெறாது என நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

Recommended Video

    #BREAKING நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறாது- மத்திய அரசு..!

    நேரடியாக பட்ஜெட் கூட்ட தொடரில் பங்கேற்கவே அனைத்து கட்சிகளும் விரும்புவதாகவும் அவர் கூறினார். கொரோனா காரணமாக ஏற்கனவே நடந்த நாடாளுமன்ற கூட்டம் முன்னரே ஒத்தி வைக்கபப்ட்டது குறிப்பிடத்தக்கது.

    govt says no winter session of Parliament due to covid 19

    விவசாயிகளின் போராட்டத்திற்கு காரணமான வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க ஒரு கூட்டட்தொடரை கூட்ட வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரகலாத் ஜோஷிக்கு ஒரு கடிதம் எழுதினார். இந்த கடிதத்துக்கு பதிலத்த பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-

    நாடாளுமன்ற கூட்ட தொடர் நடத்துவது குறித்து அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இந்த கூட்ட தொடர் குறித்து எதிர்கட்சிகளுடன் ஒருமித்த கருத்து இல்லை.அனைத்து அரசியல் கட்சிகளும் கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடாளுமன்ற கூட்ட தொடரை ஒத்தி வைக்கவே அனைத்து கட்சி தலைவர்கள் விரும்புகின்றனர்.

    ஜனவரி மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்ட தொடரில் நேரடியாக பங்கேற்பதை அவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். எனவே கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நடைபெறாது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னதாக நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம் என்று பிரகலாத் ஜோஷி கூறினார்.

    English summary
    Parliamentary Affairs Minister Prakash Joshi has said that the winter session of Parliament will not be held due to the corona infection
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X