CJP Protest மாணவரிடம் ரூ. 5 லட்சம் பிணை கோரிய மாஜிஸ்திரேட் சஸ்பெண்ட்.. சுப்ரீம் கோர்ட்டில் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்காக பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ரூ.5 லட்சம் மதிப்பிலான தனிநபர் பிணைப்பத்திரத்தை சமர்ப்பிக்காத மாணவர் ஒருவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நொய்டா நிர்வாக மாஜிஸ்திரேட் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கௌதம புத்தா பல்கலைக்கழக மாணவரான அக்ஷத் திரிபாதி, பி.என்.எஸ்.எஸ் சட்டத்தின் 130வது பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் வழங்கிய அறிவிப்பை எதிர்த்துத் தாக்கல் செய்த ரிட் மனுவுக்குப் பதிலளிக்கும்போது, ​​சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

CJP protest supreme court magistrate

கரப்பான் பூச்சி கட்சி இளைஞர்களின் போராட்டம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி 36 நாட்கள் நடைபெற்றது. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான பிரச்சனைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் அப்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதையடுத்து, கரப்பான்பூச்சி கட்சி முன்வைத்த மற்ற கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. போராடிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம புத்தா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் அக்ஷத் திரிபாதி, டெல்லியில் நடைபெற்ற கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். இதையடுத்து அவரிடம் ரூ.5 லட்சம் கேட்டு ஜாமீன் நோட்டீஸை மாஜிஸ்திரேட் அனுப்பினார். இந்த நோட்டீஸ் பின்னர் போலீசாரால் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும், இது சர்ச்சையாக வெடித்தது.

ஜூலை மாதத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணையின் போது, ​​தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் பி.வி. தினேஷ் இந்த மனுவைக் குறிப்பிட்டார். "அதிகாரிகளுக்கு ஒரு வலுவான செய்தி சென்றடைய வேண்டும்" என்று கூறிய மூத்த வழக்கறிஞர், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அமர்வை வலியுறுத்தினார்.

மாணவர்களிடையே "அரசுக்கு எதிரான தவறான பேச்சுகளில்" ஈடுபட்டு வருவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், ஒரு பிணைப்பத்திரம் சமர்ப்பிக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டிருந்ததாகவும் மூத்த வழக்கறிஞர் தினேஷ் சுட்டிக்காட்டினார்.

நேற்று இந்த விவகாரம் தன் முன் குறிப்பிடப்பட்டபோது , ​​தாம் அதுகுறித்து வலுவான நிலைப்பாட்டை எடுத்ததாகவும், மாநில அரசின் பதிலைக் கோரியதாகவும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் சுட்டிக்காட்டினார். முன்னதாக, "ஒரு மாஜிஸ்திரேட் எப்படி நோட்டீஸ் அனுப்பினார்? எந்த மாணவர் மீதும் கட்டாய நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். அந்த உத்தரவை எந்த மாஜிஸ்திரேட்டும் மீற முடியாது" என்று அவர் காட்டமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

அதைத்தொடர்ந்து, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அந்த அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் கே.ஆர். மூலம் தாக்கல் செய்யப்பட்ட திரிபாதியின் மனுவில், மாணவர் போராட்டங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்து, மாணவர்களுக்கு எதிரான வற்புறுத்தல் நடவடிக்கைகளைத் தடைசெய்த உச்ச நீதிமன்றத்தின் செப்டம்பர் 1 ஆம் தேதி உத்தரவை இந்த நடவடிக்கைகள் மீறுவதாக வாதிடப்பட்டது.

ரூ. 5 லட்சம் பிணைப்பத்திரத்தையும் அதற்கு இணையான ஜாமீன்தாரர்களையும் கோருவது, சட்டப்பிரிவின் 21-வது பிரிவின் கீழ் தனிநபர் சுதந்திரத்தை கடுமையாகப் பறிப்பதற்குச் சமம் என்றும், அதே சமயம் ஓர் நாள் அறிவிப்பு இயற்கை நீதியின் கோட்பாடுகளை மீறுவதாகவும் வாதம் வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+