என்னை தூக்கிலிடுங்கள்.. திடீரென டெல்லி போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அபிஜித் தீப்கே! என்னாச்சி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தேசியக்கொடி போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்று அபிஜித் தீப்கேவிற்கு டெல்லி போலீசார் இன்று நோட்டீஸ் வழங்கியபோது அவர், ''என்னை தூக்கிலிடுங்கள்'' என்று கூறி போலீசாருக்கு சவால் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

hang-me-cjp-founder-abhijeet-dipke-confrontation-with-delhi-police-who-comes-to-serve-notice-ahead

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் இன்று மாலை 5 மணிக்கு தேசியக்கொடி போராட்டத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.

இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. பார்க்கை சுற்றிய இடங்களில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 163ன் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய 144 தடை உத்தரவு போன்றதாகும். ஆனால் அபிஜித் தீப்கே தேசியக்கொடி போராட்டத்தில் உறுதியாக உள்ளார்.

இந்நிலையில் தான் போராட்டத்துக்கு முன்பாக டெல்லியில் அபிஜித் தீப்கே தங்கி உள்ள வீட்டிற்கு போலீஸ் அதிகாரி சென்று இன்று நோட்டீஸ் வழங்கினார். சென்ட்ரல் பார்க் போராட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்று போலீசார் அபிஜித் தீப்கேவிடம் நோட்டீஸ் வழங்கினார்.

நோட்டீஸில், ''கன்னாட் பிளேஸ் வர்த்தக கடைகள் இருக்கும் இடமாகும். இங்கு அதிகளவில் மக்கள் கூட முடியாது. ஒருவேளையில் மக்கள் அதிகம் கூடினால் அவசர காலத்தில் வெளியேற முடியாது. இங்கு கடைகள், ஹோட்டல்கள், வங்கிகள், அலுவலகங்கள், சாலையோர கடைகள் அதிகம் உள்ளன.

வீக்எண்ட்டில் மாலை நேரத்தில் அதுவும் பண்டிகை காலங்கும் தொடங்கும் நேரத்தில் அங்கு போராட்டம் நடத்துவது பொதுமக்களை் பாதிக்கும். கன்னாட் பிளேஸ் அருகே பிஸியான ராஜீவ் சவுவ் மெட்ரோ நிலையம் உள்ளது. அதோடு இந்த இடம் போராட்டம் நடத்துவதற்கான இடம் கிடையாது. இதனால் சட்டத்துக்கு பணிந்து நடந்து கொள்ள வேண்டும்'' எனவும், போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த சமயத்தில் அபிஜித் தீப்கே,''உங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் எழுதி உள்ளீர்கள். இது மிகவும் அபத்தமானது. இதற்கு பதில் என்னை தூக்கிலிடுங்கள். ஏனென்றால் உங்களின் செயல் கேலிக்கூத்தாக உள்ளது.நான் வன்முறையை பற்றி பேசவில்லை. அப்படி பேசிய வீடியோ இருந்தால் அதற்கான ஆதாரங்களை காட்டுங்கள். அதோடு நான் போராட்டம் எதுவும் அறிவிக்கவில்லை. ஒலிபெருக்கியும் பயன்படுத்துவதுஇல்லை. நாங்கள் தேசியக்கொடியை தான் ஏற்றப்போகிறோம். அதற்கும் அனுமதி கிடையாதா?'' என்று சவால் விடுத்துள்ளார்.

இருப்பினும் அபிஜித் தீப்கே போலீசார் வழங்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால் அவர் எந்த ஆவணங்களில் கையெழுத்திட்டார். அதன் பின்னணி என்ன? என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை. மொத்தத்தில் இன்று டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தேசியக்கொடி போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்று அபிஜித் தீப்கேவிற்கு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளதோடு, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதனால் அபிஜித் தீப்கே இன்று போராட்டத்தில் பங்கேற்க முயன்றால் உடனடியாக கைது செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+