டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனிமொழியை பேசவே விடல.. சுப்ரியாவுக்கு வந்த ஆத்திரம்.. தயாநிதி மாறனின் சிரிப்பு.. தடதடத்த அவை

கனிமொழிக்காக சப்போர்ட் செய்து பேசி எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்டார் சரத்பவார் மகள்

Google Oneindia Tamil News

டெல்லி: கனிமொழி எம்பியை, லோக்சபாவில் பேச விடாமல் கூச்சல் போட்டு அமைச்சர்கள் தடுத்து கொண்டே இருந்த நிலையில், அப்போது கனிமொழிக்காக எழுந்து நின்று குரல் கொடுத்துள்ளார் சரத்பவார் மகள்... இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
இன்று லோக்சபாவில் வழக்கம்போல் வாதங்கள் வெடித்தன.. ஆனால் அதற்கு, சரத்பவார் மகள் குறித்து முன்பு 2 விஷயங்களை இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.

Recommended Video

    கனிமொழியை பேசவே விடல.. சுப்ரியாவுக்கு வந்த ஆத்திரம்.. தயாநிதி மாறனின் சிரிப்பு.. தடதடத்த அவை

    திமுக எம்பியும், மகளிரணி செயலாளருமான கனிமொழியும், மகாராஷ்டிரா மாநில எம்பியும், சரத்பவார் மகளுமான சுப்ரியா சுலேவும் மிக நெருங்கிய தோழிகள்..

    அடித்தட்டு மக்களை தவிக்க விட்டு.. கார்பரேட்களுக்கு உதவுகிறது மத்திய அரசு- லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்அடித்தட்டு மக்களை தவிக்க விட்டு.. கார்பரேட்களுக்கு உதவுகிறது மத்திய அரசு- லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்

    ஒருநாள், கனிமொழிக்கு அவசர அவசரமாக சுப்ரியா போன் செய்தார்.. அப்போது மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி பகுதியை சேர்ந்த 22 வயது பெண் யுவாந்தி அணில் சாகேத் என்பவர், சென்னையிலுள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், அவருடைய அப்பா திடீரென இறந்துவிட்டதாகவும், அவரை உடனடியாக ஊருக்கு அனுப்பி வைக்க உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.

    இளம்பெண்

    இளம்பெண்

    இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண் யுவாந்தி அணில் சாகேதை தொடர்பு கொண்டு பேசினார் கனிமொழி.. பிறகு, ஊருக்கு செல்வதற்கான அனுமதியை, பெண் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் கேட்டார்.. அதற்கு அந்த நிறுவனமோ, இளம்பெண்ணை தனியாக அவ்வளவு தூரம் அனுப்ப முடியாது, அவருடன் யாராவது செல்ல வேண்டும் என்று கனிமொழியிடம் கூறியது.. உடனே கனிமொழியும், அந்த இளம்பெண்ணுடன் திமுக மகளிரணி நிர்வாகிகளை அனுப்ப முடிவு செய்தார்... அதற்காக இந்த தகவலை திமுக மகளிரணி சமூக வலைதளக்குழுவில் கனிமொழி பகிர்ந்தார்.

     கலைச்செல்வி

    கலைச்செல்வி

    இதைப் பார்த்த சோழிங்கநல்லூர் கிழக்குப்பகுதி திமுக மகளிரணி நிர்வாகி கலைச்செல்வியும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகி பொன்மணியும், அந்த இளம்பெண்ணுக்கு துணையாக தாங்கள் செல்வதாக சொன்னார்கள்.. அதன்படியே 3 பெண்களுக்கும், முறையான அனுமதியை பெற்று, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார் கனிமொழி... பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும்,சரத்பவார் மகள் சுப்ரியாவும் கனிமொழியின் இந்த மனிதநேயமிக்க உதவியை எண்ணி நெகிழந்து நன்றி சொன்னார்கள்..

     அண்ணா.. வாங்க

    அண்ணா.. வாங்க

    அதேபோல இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது.. 3 வருடங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டபோது, அந்த விழாவில், முக ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அவரை சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே வரவேற்று மேடையில் உட்கார வைத்தனர்.. முன்னதாக, ஸ்டாலினை பார்த்ததுமே, "வாங்க அண்ணே" என்று அன்பாக உபசரித்த சுப்ரியா சுலே, அவரிடம் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்..

     தொழிலதிபர்

    தொழிலதிபர்

    அந்த அளவுக்கு கனிமொழி, ஸ்டாலினிடம், சரத்பவார் குடும்பமே நெருக்கமாக உள்ளது.. இந்நிலையில், இன்று லோக்சபாவில் கனிமொழிக்காக சரத்பவார் மகள் வரிந்து கட்டி வந்த சம்பவம் நடந்துள்ளது.. லோக்சபாவில் இன்று விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற்றது... அப்போது கனிமொழி பேசும்போது, பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் உயர்ந்துள்ளன.. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தும், அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை. உணவு வாங்கக் கூட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் ஒரு தொழிலதிபர் மட்டும் உலகளவில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் கறுப்பு பணம் புழங்கி வருகிறதே எப்படி? என கேள்வி எழுப்பி பேசினார்.

     கனிமொழி ஆவேசம்

    கனிமொழி ஆவேசம்


    ஆனால், கனிமொழியை பேசவிடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.. குறிப்பாக அதிமுக, பாஜக எம்பிக்கள் பேச விடாமல் கனிமொழியை எதிர்த்து கூச்சலிட்டனர்.. கனிமொழிக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த சரத்பவார் மகளோ, இதை பார்த்ததும் ஆவேசமாகிவிட்டார்.. உடனே எழுந்து நின்று, எதிரே இருக்கும் எம்பிக்களை பார்த்து ஆவேசமாக சீறினார்.. கனிமொழிக்காக பரிந்து பேசியதை பார்த்து, எதிர்க்கட்சிகள் ஒருகணம் அமைதியாகிவிட்டன.

     கனிமொழி கோபம்

    கனிமொழி கோபம்

    உடனே கனிமொழி, அவர்களை பார்த்து, "நீங்க எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றலேன்னா நாங்க என்ன செய்வது? சற்று நேரத்துக்கு முன்புதான், நீங்க பேசும்போது என்ன சொன்னீங்க? நாங்கள் பேசும்போது அமைதியாக இருங்க.. நீங்க பேசும்போது, நாங்க அமைதியாக இருக்கிறோம் என்று சொன்னீங்களே.. இப்போ சொன்ன அந்த வாக்குறதியையும் காற்றில் பறக்கவிட்டால் எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியல" என்றார்..

     தயாநிதி மாறன்

    தயாநிதி மாறன்

    கனிமொழி இப்படி சொன்னதுமே, அவருக்கு பின்னால் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த எம்பி தயாநிதி மாறன், மேஜையை பலமாக தட்டி சிரித்தார்.. கனிமொழியின் இந்த பேச்சையும் வரவேற்றார்.. கனிமொழிக்காக வரிந்து கட்டிய சரத்பவார் மகளும், கைகளை தட்டிய உற்சாகமூட்டிய தயாநிதி மாறனும் லோக்சபாவையே இன்று வியந்து பார்க்க வைத்துவிட்டனர்.

    English summary
    happy incident in the lok sabha today and Sharathpawar's daughter support dmk mp Kanimozhi கனிமொழிக்காக சப்போர்ட் செய்து பேசி எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்டார் சரத்பவார் மகள்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X