"அதுக்கு மத்திய அரசு எப்படி பொறுப்பு ஆகும்!" உச்சத்தில் பெட்ரோல் விலை.. விளக்கும் ஹர்தீப் சிங் பூரி
டெல்லி: பெட்ரோல் டீசல் விலை காரணமாகப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட உயரும் அபாயம் உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள போது, இந்தியாவில் மட்டுமே பெட்ரோல் -டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர் இந்நிலையில், இது பேசிய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பெட்ரோல்- டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியைக் குறைக்காத மாநிலங்களை இப்போதே உடனடியாக vat எனப்படும் மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாகக் கடந்த இரண்டு மாதங்களாக நாட்டின் பணவீக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது.

வாட் வரி
பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ஏறக்குறைய அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தியுள்ளது, இது பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இது குறித்து ஹர்தீப் சிங் பூரி மேலும் கூறுகையில், "பெட்ரோலியப் பொருட்களின் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) மாநிலங்கள் குறைக்க வேண்டும். வாட் வரியைக் குறைந்தது 50 சதவீதம் குறைக்க வேண்டும். அப்போது தான் அது பொதுமக்களுக்குப் பெரியளவில் உதவும். மாநில அரசுகள் வாட் வரியை அதிகமாக வைத்துக் கொண்டுள்ள நிலையில், எரிபொருள் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணம் என்று சொல்லலாம்" என்றார்.

மத்திய அரசு
கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறைத்தன. அதன் பின்னர் பல வாரங்களுக்கு பெட்ரோல் விலை மாற்றப்படாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் கடந்த மார்ச் மாதம் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

காரணம் இல்லை
ஹர்தீப் சிங் பூரி மேலும் கூறுகையில், "பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதற்கு மத்திய அரசு பொறுப்பல்ல. எண்ணெய் நிறுவனங்கள் இதில் ஆராய்ந்து உரிய முடிவை எடுக்க வேண்டும். நாங்கள் (மத்திய அரசு) கூறுவதால் ஒன்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை உயர்ந்ததில்லை. எனது கவலை எல்லாம் பணவீக்கம் பற்றித் தான். அதைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

காரணம்
ஆபத்தான நிலையைத் தாண்டாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதே நேரம் உலகின் அனைத்து நாடுகளும் பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு, பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது, இது மற்ற நாடுகள் உடன் ஒப்பிடும்போது மிக குறையவே. உலக அளவில், ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம். குறைந்த வரத்துக் காரணமாகவே விலை அதிகரித்துள்ளது" என்றார்.
-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்வு.. டீசல் ரூ.3 வரை அதிகரிப்பு.. இடியை இறக்கிய நயாரா நிறுவனம் -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications