டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீன் சைஸுக்குகூட இல்லையே.. ஜஸ்ட் லைக் தட் டுமீல் டுமீல்னு சுடுதே.. வாய் பிளக்க வைத்த ஆண் கடற்குதிரை!

Google Oneindia Tamil News

டெல்லி: கடற்குதிரை ஒன்று கடலுக்கு அடியில் தனது குட்டிகளை ஈனும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுவரை பார்த்திராத காட்சிகள் இவை என்பதால் இவை வைரலாக்கப்படுகிறது.

Recommended Video

    மீன் சைஸுக்குகூட இல்லையே.. ஜஸ்ட் லைக் தட் டுமீல் டுமீல்னு சுடுதே.. வாய் பிளக்க வைத்த ஆண் கடற்குதிரை!

    பொதுவாக கிராமப்புறங்களில் ஆடு, மாடு, பூனை, நாய் உள்ளிட்டவை குட்டிகளை ஈனுவதையும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதையும் பெண்கள் குழந்தை பெற்று கொள்வதையும் பார்த்திருப்போம்.

    ஆனால் கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் உள்ள ஜீவராசிகளின் இனப்பெருக்கம் உள்ளிட்டவற்றை நாம் கண்டிருக்க வாய்ப்புகள் இல்லை.

    பொலிவியாவில் பயங்கரம்.. கொரோனா சமூகப் பரவலின் கோரம்.. வீடுகள், தெருக்களில் கிடந்த 400 சடலங்கள்! பொலிவியாவில் பயங்கரம்.. கொரோனா சமூகப் பரவலின் கோரம்.. வீடுகள், தெருக்களில் கிடந்த 400 சடலங்கள்!

    வைரல்

    வைரல்

    ஏதாவது ஜியோகிராப்பிக் சேனலிலோ அனிமல் பிளானட்டிலோ காட்டினால்தான் உண்டு. இதே ஆழ்கடலில் இருக்கும் உயிரினங்கள் குட்டி போடுவதை நாம் கண்டிருக்கவே முடியாது. இந்த நிலையில் கடற்குதிரை ஒன்று குட்டிகளை ஈனும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    குட்டி

    குட்டி

    சுமார் 19 வினாடிகள் கொண்ட இந்த விடியோவில் ஆண் கடற்குதிரை ஒன்று குட்டிகளை டமால் டுமில் என்று சொல்லும் அளவுக்கு சிறிய சிறிய குரூப்புகளாக ஈனும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடற்குதிரையை பொருத்தமட்டில் ஆண் குதிரையே குட்டி போடும். கிட்டதட்ட காங்காருகள் தனது குட்டியை மடியில் கட்டி கொள்வது போன்றுதான். இந்த வீடியோ பதிவிட்ட சில மணிநேரத்தில் வைரலானது.

    50 குஞ்சுகள்

    50 குஞ்சுகள்

    அதாவது பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்க பைகளில் போட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல பேணி காத்து 6 வாரங்கள் பாதுகாத்து குஞ்சு பொரிக்கும். சுமார் 200 முட்டைகளில் 50 முதல் 100 வரையிலான குட்டிகள் வெளியே வரும்.

    உணவு

    உணவு

    பொதுவாக விலங்குகள், பறவைகள் குட்டி போட்டவுடனோ அல்லது குஞ்சு பொரித்தவுடனோ சுயமாக உண்ணத் தெரியும் வரை தாயே குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும், உணவை சேகரித்து தரும். ஒரு கால கட்டத்துக்கு பிறகு குட்டிகள் சுதந்திரமாக இரைத் தேட செல்லும் நிலை வந்தவுடன் அது பாட்டுக்கு தனது வயிற்றை நிரப்பி கொள்ள வேண்டியதுதான்.

    எண்ணிக்கை

    ஆனால் கடற்குதிரையை பொருத்தவரை குட்டி ஈனுவதோடு சரி. அதை பராமரிப்பது கிடையாது. அது போல் அதற்கு உணவை கொடுக்காது. மற்ற உயிரினங்களிடம் இருந்து பாதுகாக்கவும் செய்யாது. இதனால்தான் அந்த குட்டிகள் பெரும்பாலும் மற்ற உயிரினங்களுக்கு இரையாக சென்றுவிடும் இல்லாவிட்டால் இறந்துவிடும். இதனால்தான் கடற்குதிரைகள் நிறைய எண்ணிக்கையில் இல்லை.

    English summary
    Have you ever seen a sea horse giving birth? Here is the video which u ever seen.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X