இது செம பெர்பார்மன்ஸ்.. அசத்திய பிரதமர் மோடி.. அக்சயகுமாருடன் நேர்காணலை கவனித்தீர்களா
Recommended Video
டெல்லி: உருக உருக பேசி பெர்பாமென்ஸ்லேயே மக்களை தன் பக்கம் ஈர்ப்பதில் நிச்சயம் பிரதமர் நரேந்திர மோடி கெட்டிக்காரர் தான். நடிகர் அக்சயகுமாருக்கு பிரதமர் மோடி அளித்த இன்டர்வியூவை கேட்டால் நிச்சயம் புல்லரித்துவிடும்.
மக்களவை தேர்தல் நேரத்தில் மோடியின் இத்தகைய செயல்களை முக்கியமான ஒன்றாக பார்க்க வேண்டி உள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் பிரதமர் மோடியுடன் நடிகர் அக்சயக்குமார் நேர்காணல் நடத்தினார். இந்த நேர்காணலில் அரசியல் அல்லாத பல்வேறு கேள்விகளை அக்சயகுமார் எழுப்பினார்.

ஆர்எஸ்எஸ்வாதி
அந்த நேர்காணலில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தான் பிரதமர் ஆக வேண்டும் என்று நினைத்து பார்த்ததே இல்லை என்றும், சன்னியாசியாக வேண்டும் என்றே நினைத்ததாகவும் கூறியுள்ளார். தீவிர ஆர்எஸ்எஸ்வாதியாக பிரதமர் மோடி சன்னியாசியாக மாற நினைத்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. அதை தேர்தல் நடக்கும் இந்த சமயத்தில் சொல்லி இந்து மக்களை கவர முயன்றுள்ளார்.

வங்கி கணக்கு இல்லை
எம்.எல்.ஏ ஆகும் முன் வரை தனக்கு வங்கிக்கணக்கு இல்லை என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமர் மோடிக்கு எம்எல்ஏவாக ஆகும் முன்பு வங்கி கணக்கு இல்லை என்ற ஒற்றை செல்லே, மக்களை ஆச்சர்யப்பட வைக்கும் என்பதால் மோடியின் நேர்காணலில் இதுதான் ஹைலைட்.

மோடியின் நட்பு
அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்தாலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆண்டு தோறும் தனக்கு குர்தா மற்றும் இனிப்புகள் அனுப்புவதாக அக்சயகுமாரிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார். இதன் மூலம் அரசியல் களத்தில் எதிரியாகவே இருந்தாலும் மம்தா உடன் நட்பு பாராட்டுவதாக இந்த நேர்காணலில் மக்களிடம் வெளிப்படையாக கூறியுள்ளார்.

தூக்கம் இல்லை
தனக்கு கோபம் வராததை கண்டு மக்கள் ஆச்சரியப்படுவதாகவும், தன்னிடம் பணிபுரிபவர்களிடம் கோபப்படுவது கிடையாது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். கோபம் வரும் சூழலை நான் ஏற்படுத்திக்கொள்வது இல்லை என்று மோடி கூறியுள்ளார். மேலும் தனக்கு 3 - 4 மணி நேரத்திற்கு மேலான தூக்கம் தேவையில்லை என்றும் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேச்சின் மூலம் ஒரு நாளைக்கு பல மணி நேரம் உழைப்பதாகவும், யாரிடமும் தான் கோபப்படுவது இல்லை என்றும் சொல்ல வருகிறார். இதனை மக்களும் புரிந்து இருப்பார்கள்.

வளர்ச்சி நாயகன்
இப்போது மொத்த கட்டுரையையும் குறிப்பிட்டு சொல்லவருவது ஒரு சிறிய விஷயம் தான். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு, கிட்டத்தட்ட இந்தியாவின் முக்கால்வாசி ஊடகங்ளுக்கு நேர்காணல் கொடுத்தார். அப்போது பேசிய மோடி, தன்னை வளர்ச்சியின் நாயகனாக கூறினார். கருப்பு பணம் குறித்து ஆவேசமாக பேசினார். டீ விற்றதாக கூறினார். கடைசியில் குஜராத் மாடல் வளர்ச்சியை சொல்லி வெற்றி பெற்றார்.

பெர்பாமென்ஸ்
இந்த முறை ஒரே ஒரு நேர்காணல் அதுவும் ஊடகத்தினருடன் அல்லாமல் அக்சயகுமாரை வைத்து நேர்காணல் நடத்தியுள்ளார். பிரதமர் மோடியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் உருக உருக பேசுவதுதான். அப்படி பேசிதான் வெற்றி பெற்று வருகிறார். அந்த வகையில் இன்றைய அவரது நேர்காணலில் மக்களை கவரும் வகையில் எளியவராக தன்னை காண்பித்துள்ளார். மொத்தத்தில் பிரதமர் மோடியின் பெர்பாமென்ஸ் எப்போதுமே சூப்பர். ஆனால் வரும் மே 23ம் தேதி அதற்கான ரிசல்ட் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications