இன்னும் ரெண்டே வருஷம் தான்.. அமெரிக்காவுக்கு இணையா ரோடு.. பெட்ரோல் கார் விலையில் எலக்ட்ரிக் கார்..!
டெல்லி : இன்னும் இரண்டு வருடங்களில் பெட்ரோல் கார்களின் விலைக்கே எலக்ட்ரிக் கார்களும் கிடைக்கும் எனவும், 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன் இந்தியாவின் சாலை கட்டமைப்பு அமெரிக்காவை போல் இருக்கும் என்று உறுதியளிப்பதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்
இந்தியாவில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால் அதிகளவு சிலை, பராமரிப்பு, சர்வீஸ் செண்டர்கள், சார்ஜிங் மையங்கள் இல்லாதது உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் உள்ள நிலையில், இந்தியாவில் எலெட்ரிக் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு பெட்ரோல், டீசல் வாகனங்களை விட குறைவாகவே உள்ளது.

அமைச்சர் நிதின் கட்கரி
இந்நிலையில் இன்னும் இரண்டு வருடங்களில் பெட்ரோல் கார்களின் விலைக்கே எலக்ட்ரிக் கார்களும் கிடைக்கும் எனவும், 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன் இந்தியாவின் சாலை கட்டமைப்பு அமெரிக்காவை போல் இருக்கும் என்று உறுதியளிப்பதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 2022-23ஆம் ஆண்டுக்கான சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கான மானிய கோரிக்கைகள் குறித்து மக்களவையில் பதிலளித்த கட்கரி, விலை குறைந்த உள்நாட்டு எரிபொருளுக்கு மாற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதோடு, இந்த எரிபொருள் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், மாசு அளவைக் குறைக்கும் என்றும் கூறினார்.

எலக்ட்ரிக் கார் விலை
போக்குவரத்துக்கு ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை பின்பற்றுமாறு எம்.பி.க்களை வலியுறுத்திய கட்கரி, அந்தந்த மாவட்டங்களில் கழிவுநீரை பச்சை ஹைட்ரஜனாக மாற்றுவதற்கு முன்முயற்சி எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஹைட்ரஜன் விரைவில் மலிவான எரிபொருள் மாற்றாக இருக்கும், என்ற அவர், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர், கார், ஆட்டோரிக்ஷா ஆகியவற்றின் விலை, பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர், கார், ஆட்டோரிக்சஷா போன்றவற்றின் விலையிலேயே இருக்கும் என்றார். மேலும் லித்தியம் அயன் பேட்டரியின் விலை குறைகிறது.

சாலைகள் மேம்படும்
துத்தநாகம்-அயன், அலுமினியம்-அயன், சோடியம்-அயன் பேட்டரிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், பெட்ரோலுக்கு 100 ரூபாய் செலவழித்தால், மின்சார வாகனத்திற்கு 10 ரூபாய் தான் செலவிடுவீர்கள்,'' என்றார். அமெரிக்காவில் கட்டப்பட்ட சாலைகளை இந்தியாவில் உள்ள சாலைகளுடன் ஒப்பிட்டு, கட்காரி மேலும் கூறும் போது, இந்தியாவை செழிப்பாக மாற்ற, 2024 டிசம்பருக்கு முன் இந்தியாவின் சாலைகள் மேம்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். உள்கட்டமைப்பு அமெரிக்காவைப் போல இருக்கும்." என்றார்.
Recommended Video

போக்குவரத்து நெரிசல்
மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், மாசு பிரச்னையைச் சமாளிக்கவும் தேசிய தலைநகரில் ரூ.62,000 கோடி மதிப்பில் சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நெடுஞ்சாலை இணைப்பு மற்றும் சாலை உள்கட்டமைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை எடுத்துரைத்ததோடு, டெல்லியில் இருந்து மீரட்டுக்கு பயணிக்க 40 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று கூறினார். கட்டுமானச் செலவைக் குறைத்து, தரத்தை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம் என்ற அவர், உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முன்னேற்றம் குறித்து கூறுகையில், டெல்லி - ஜெய்ப்பூர் இடையே சாலைப் பயணம்; மற்றும் டெல்லியில் இருந்து ஹரித்வாருக்கு இப்போது 2 மணி நேரம் ஆகும் என்றார்.
-
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications