வெறும் 30 நாள்.. அரசியல் கட்சிகளுக்கு ரூ.542.25 கோடி நன்கொடை.. ஜரூராக நடந்த தேர்தல் பத்திர விற்பனை
டெல்லி: இமாச்சல் பிரதேசம், குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி இந்தியாவில் தேர்தல் பத்திர விற்பனையை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மேற்கொண்டது. இதன்மூலம் மொத்தம் 741 தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.542.25 கோடியை அரசியல் கட்சிகள் வருமானமாக ஈட்டியுள்ளன.
அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். கட்சிகள் பெறும் நன்கொடை விபரங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இருப்பினும் கூட கட்சிகள் பெறும் நன்கொடை விபரங்கள் மறைக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால்
அரசியல் கட்சிகள் திரட்டும் தேர்தல் நிதி, ஒளிவுமறைவின்றி வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதற்காக, மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் முறையை அறிமுகம் செய்தது.

தேர்தல் பத்திரங்கள் விற்பனை
இதன்மூலம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தேர்தல் பத்திரங்களை வெளியிடும். இதன்மூலம் தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க முடியும். அதன்படி இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலையொட்டி அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 10ம் தேதி வரை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் 22வது முறையாக தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.

ஆர்டிஐ தகவல்
இந்நிலையில் தான் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் லோகேஷ் பாத்ரா என்பவர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் விற்பனை செய்யப்படும் தேர்தல் பத்திரங்கள் குறித்த விபரங்களை கேட்டு இருந்தார். அதற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பதிலளித்துள்ளது. இதில் பல்வேறு விஷயங்கள் வெளியாகி உள்ளன.

ரூ.542.25 கோடி வருமானம்
அதன்படி அக்டோபர் 1 முதல் 10 வரையிலான விற்பனையில் ரூ.545.25 கோடி மதிப்பிலான 741 தேர்தல் பத்திரங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவால் விற்பனை செய்யப்பட்டன. இதில் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் அரசியல் கட்சிகள் ரூ.542.25 கோடி மதிப்புள்ள 738 பத்திரங்கள் பணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் ரூ.10,767 கோடி
மேலும் தேர்தல் பத்திரம் இந்தியாவில் 2018ல் நடைமுறைக்கு வந்தது. மொத்தம் ரூ.10,791.47 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் விற்கப்பட்ட நிலையில் ரூ.10,767.88 கோடி வரை பணமாக மாற்றம் செய்யப்பட்டுள்னள. மேலும் பணமாக மாற்றப்படாத ரூ.23.59 கோடி தேர்தல் பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்ச பத்திரங்கள்
மேலும் இந்தியாவில் அதிகபட்சமாக ஐதரபாத்தில் உள்ள வங்கி கிளையில் ரூ.117 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த படியாக சென்னையில் உள்ள வங்கி கிளையில் ரூ.115 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது குஜராத் காந்தி நகரில் ரூ.81.50 கோடியாகும், டெல்லியில் ரூ.75.70 கோடியாகும், கொல்கத்தாவில் ரூ.76.10 கோடியாகும், மும்பையில் ரூ.40,25 கோடியாகும், ஜெயப்பூரில் ரூ.15.70 கோடியாகவும் உள்ளன.

பணமாக மாற்றப்பட்ட இடங்கள்
மேலும் பத்திரங்களை பணமாக மாற்றுவதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. டெல்லியில் மட்டும் ரூ.285.15 கோடி பணமாக மாற்றப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் ரூ.143.10 கோடியும், ஐ தரபாத்தில் ரூ.67 கோடிம்,சென்னையில் ரூ.10 கோடியும், புவனேஸ்வரில் ரூ.35 கோடியும் பணமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றும் வகையில் 25 கட்சிகள் வங்கி கணக்குகள் துவங்கி உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications